கடலை போடாதீங்க! நிலக்கடலையை இப்படி சாப்பிட்டா ஆரோக்கியமான வாழ்க்கை கேரண்டி

Healthy Groundnuts: பச்சையாக அதிகம் சாப்பிட முடியாது என்பதால், வேக வைத்து சாப்பிடுவதா அல்லது வறுத்து சாப்பிடுவதா என்ற கேள்விகள் எழுகின்றன... வறுத்த நிலக்கடலையை தோலோடு சாப்பிடலாமா? கூடாதா? கேள்விகளுக்கான விடைகள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 17, 2022, 08:08 AM IST
  • நிலக்கடலை சாப்பிடும் டிப்ஸ்
  • வேர்க்கடலை ஆரோக்கியத்திற்கான ஆணிவேர்
  • கடலைகளில் சிறந்த வேர்க்கடலையின் மருத்துவ பண்புகள்
கடலை போடாதீங்க! நிலக்கடலையை இப்படி சாப்பிட்டா ஆரோக்கியமான வாழ்க்கை கேரண்டி title=

பல்வேறு ஊட்டச்சத்துகள் கொண்ட வேர்க்கடலையில்  இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை கேன்சர் செல்களை மேலும் வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டவை என்பதோடு, ஏற்கனவே இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்க முயற்சி செய்கிறது என்பதும் வேர்க்கடலை எனப்படும் நிலக்கடலையின் முக்கிய மருத்துவ  குணம் ஆகும். வேர்க்கடலையில் புரதச்சத்து அதிகம் உள்ளது என்பதும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது என்பதும், நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான புரத சத்துக்களைக் கொண்டது என்பதும் நிலக்கடலையின் அற்புதமான மருத்துவ குணங்கள் ஆகும். 

ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கவும் உயிரணுக்களை அதிகரிக்கவும் பயன்படும் நிலக்கடலை, பெண்களின் கர்ப்பகாலத்தில் இரத்த விருத்திக்கு உதவுவது.  இவை அனைத்தும் வேர்க்கடலையின் நன்மைகள் என்பது பலருக்கும் தெரிந்தாலும், நிலக்கடையை பச்சையாக சாப்பிட்டால் நல்லதா அல்லது வறுத்து சாப்பிடுவது நல்லதா என்ற கேள்விகள் எழும்.

பச்சையாக அதிகம் சாப்பிட முடியாது என்பதால், வேக வைத்து சாப்பிடுவதா அல்லது வறுத்து சாப்பிடுவதா என்ற கேள்விகள் எழுகின்றன. அதற்கு அடுத்தபடியாக வறுத்த நிலக்கடலையை தோலோடு சாப்பிடலாமா? கூடாதா? என்றும் கேள்விகள் எழுகின்றன.

இந்த கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்கும் சுகாதார நிபுணர்கள். எப்படி சாப்பிட்டாலும் வேர்க்கடலை நன்மை தரும் என்று கூறுகின்றனர். ஆனால் வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட்டால்தான் அதன் முழுப்பயன்களும் கிடைக்கும் என்று அறிவுறுத்துகின்றனர். வேர்க்கடலையின் தோல்களிலும் நிறையச் சத்துகள் உள்ளன.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை கட்டுபடுத்த உதவும் கொய்யா இலை 

ஒரு நாளைக்கு 50 கிராம் வேர்க்கடலை சாப்பிட்டால் போதும். ஆனால், வேர்க்கடலை சாப்பிடும்போது, அதன் சுவை கசப்பாக இருந்தால், அதை சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது உணவு செரிமாணம் ஆவதை பாதிக்கக் கூடியது என்பதை மறந்துவிடக் கூடாது. 

வேர்க்கடலையை பச்சையாக சாப்பிட்டால் அதனுடன் வெல்லம் சாப்பிட வேண்டும். நிலக்கடலையில் கலோரி, புரதம், இரும்பு, ஃபோலேட், நியாசின், துத்தநாகம் போன்றவை பாதமை விட அதிகமாக உள்ளது. இதனால் தான் நிலக்கடலையை ஏழைகளின் பாதாம் என்று சொல்வார்கள். நிலக்கடலையில் பாதாமை விட வைட்டமின் பி சத்துக்கள் அதிகம்.

பாதாமை விட நிலக்கடலையில் துத்தநாகத்தின் அளவு கூடுதலாக உள்ளது என்பது கூடுதல் தகவல்.  பயோட்டின் உள்ள உணவுப் பொருட்களில் நிலக்கடலை முக்கியமான ஒன்றாகும், இது கர்ப்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. தியாமின் வைட்டமின் பி 1 நமது உடலின் செல்கள், கார்ப்ஸை ஆற்றலாக மாற்ற உதவுகிறது மற்றும் உங்கள் இதயம், தசைகள் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு அவசியமானது. எனவே வேர்க்கடலை தினமும் சாப்பிடவும். தோலோடு சாப்பிடுவது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அடடா வேர்க்கடலையில் இத்தனைப் பக்கவிளைவு இருக்கிறதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News