புதுடெல்லி: வைட்டமின்கள், புரதம், தாதுப் பொருட்கள், கொழுப்புச் சத்து, நார்ச்சத்து என அனைத்தையும் கொண்ட சீத்தாப்பழம், மிகவும் சுவையானது. பாதிப்பு தரக்கூடிய நச்சுப் பொருட்களை வெளியேற்ற தேவையான ஆன்டிஆக்ஸிடென்ட்களை அதிகம் கொண்டது சீத்தாப்பழம். இதில் இருக்கும் வைட்டமின் சி சத்து, இந்தப் பழத்தை அருமருந்தாக்குகிறது. வைட்டமின் உடலில் அதிக நேரம் தங்குவதில்லை என்பதும், எனவே தினமும் வைட்டமின் சி அடங்கிய உணவை சாப்பிட வேண்டும் என்பதும், சமைத்த உணவில் வைட்டமின் சி சத்து போய்விடும் என்பதும் சீதாப்பழத்தின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது.
மன அழுத்தம், தொற்றுநோய் இருக்கும்போதும் விட்டமின் சி அதிகம் தேவை என்பதால் சீதாப்பழம் மருந்தாகவே செயல்படுகிறது என்று சொல்லலாம். அதேபோல ஜீரண சக்தியை அதிகரிக்கும் சீதாப்பழம், பித்தம், வாந்தி பேதி, தலைசுற்றல் ஆகியவற்றையும் குணப்படுத்தும்.
சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வெள்ளைபடுதல் நோய்க்கு சிறந்த தீர்வு : இதை மட்டும் செய்தால் போதும்..
மன அழுத்தத்தை சரி செய்யும் சீத்தாப்பழம்
தினமும் இரவில் சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால், நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும். இதற்குக் காரணம் சீத்தாப் பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் தாதுப் பொருட்கள்தான். இவை இரண்டிற்குமே மன அழுத்தத்தை சரிப்படுத்தும் குணம் உண்டு. அதோடு இந்த தாதுப் பொருட்கள், நம் உடலிலுள்ள எலும்புகளுக்கும், தசைகளுக்கும், இருதயத்திற்கும் வலுவளிக்கக் கூடியவை ஆகும்.
நீர்சத்து அதிகம் கொண்ட சீத்தாப்பழத்தில், மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து,போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன. அதேபோல, சீதாப்பழ மரத்தின் இலைகளும் மருத்துவ குணம் கொண்டவை. என்றால், சீதாப்பழ மரத்தின் வேர், கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது என்று சித்த மருத்துவம் சொல்கிறது.
மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
சீதாப்பழம் என்று அழைக்கப்படும் இப்பழம் ஆங்கிலத்தில் 'கஸ்டர்ட் ஆப்பிள்' என்றழைக்கப்படுகிறது. 'கஸ்டர்ட்' என்ற இனிப்பு சுவை இந்தப் பழத்திற்கு இருப்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்தது.
சீத்தாப்பழம் வருடம் முழுவதும் கிடைப்பதில்லை. குறிப்பிட்ட பருவத்தில்தான் மரத்தில் காய்க்கும். அடர்ந்து, உயரம் குறைவாக உள்ள சீதாப்பழ மரத்தின் முற்றிய கிளைகளில் காய்க்கும் காய்களை, நன்கு வளர்ந்த பிறகு காயாகவே பறித்து விடுவார்கள். பறித்த பிறகே பழுக்க வைப்பார்கள்.
சீதாப்பழம் கிடைக்கும் காலத்தில், அவற்றில் இருந்து ஜாம், ஜெல்லி மற்றும் ஐஸ்கிரீம், பழரசங்கள் செய்து பதப்படுத்தி வைத்துக் கொண்டு ஆண்டு முழுவதும் பயன்படுத்துகிறார்கள்.
மேலும் படிக்க | அரிசியிலும் கலர் பார்க்கும் சமூகம்! இதிலாவது வெள்ளை மோகத்தை விடுங்கப்பா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ