ஜிம் வேண்டாம்..10 நாட்களில் 10 கிலோ எடையை எளிதில் குறைக்கலாம்! ‘இதை’ சாப்பிடுங்க..

Quick Weight Loss In 10 Days Indian Diet : உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால், ஒரு சில உணவுகள் மூலம் இதை சரியாக செய்து முடிக்கலாம்.   

Written by - Yuvashree | Last Updated : May 20, 2024, 01:22 PM IST
  • 10 நாட்களில் எடை குறைய டிப்ஸ்
  • ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்
  • இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
ஜிம் வேண்டாம்..10 நாட்களில் 10 கிலோ எடையை எளிதில் குறைக்கலாம்! ‘இதை’ சாப்பிடுங்க.. title=

Quick Weight Loss In 10 Days Indian Diet : உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள், உடல் எடை அதிகரிப்பினால் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பலர் கண்டிப்பாக தங்கள் எடையை குறைக்க வேண்டும் என்று முயற்சி எடுத்து, பலன் கிடைக்காததால் அயற்சி அடைந்து விடுகின்றனர். அவர்கள், சரியான டயட்டை பின்பற்றினாலே போதும். கண்டிப்பாக, எடையை எளிதாக குறைக்க முடியும். அது, என்ன டயட் தெரியுமா? 

என்ன செய்ய வேண்டும்?

>காலையில் டீடாக்ஸ் பானம்
>காலை உணவு 250-300 கலோரிகளுக்குள் இருக்க வேண்டும்
>காலை ஸ்நாக்ஸ் 100-150 கலோரிகளுக்குள் இருக்க வேண்டும்
>மதிய உணவு 300-30கலோரிகளுக்குள் இருக்க வேண்டும்
>மாலை ஸ்நாக்ஸ் 100-150 கலோரிகளுக்குள் இருக்க வேண்டும்
>இரவு உணவு 250-300 கலோரிகளுக்குள் இருக்க வேண்டும். 

டீடாக்ஸ் பானம்:
>வெந்நீரில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்
>புதினா இலையுடன் கிரீன் டீ குடிக்கலாம்
>அப்பிள் சைடர் வினீகர் மற்றும் இஞ்சி தண்ணீர் கலந்து குடிக்கலாம்.

டீடாக்ஸ் பானம்:

>வெந்நீரில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்
>புதினா இலையுடன் கிரீன் டீ குடிக்கலாம்
>அப்பிள் சைடர் வினீகர் மற்றும் இஞ்சி தண்ணீர் கலந்து குடிக்கலாம்.

காலை உணவு:

>வெஜ் உப்மா-280 கலோரிகள்
>தானிய இட்லி அல்லது தோசை-சாம்பார்-250 கலோரிகள்
>ஓட்ஸை உலர் பழம் மற்றும் பெர்ரிக்களுடன் சாப்பிடலாம் - 300 கலோரிகள்
>கீரை அல்லது பிரட்டுடன் முட்டையின் வெள்ளைக்கரு ஆம்லெட்-270 கலோரிகள்

காலை ஸ்நாக்ஸ்:

>ஆரோக்கியமான பழங்கள்: ஆரஞ்சு, ஆப்பிள், பெர்ரி, கிரேப்ஸ்
>வருத்த கடலை அல்லது மக்கானா
>சியா விதைகளுடன் கிரேக்க தயிர்

மதிய உணவு:

>பிரவுன் ரைஸ், பருப்பு, காய்கறி குழம்பு-330 கலோரிகள்
>சிறுதானிய ரொட்டி, சிக்கன் அல்லது பனீர் கிரேவியுடன் சாப்பிடலாம்-350 கலோரிகள்
>வருத்த மீன் மற்றும் வேக வைத்த காய்கறிகள்-310 கலோரிகள்
>கினாவோ மற்றும் காய்கறி சாலட்-320 கலோரிகள்

மாலை ஸ்நாக்ஸ்:

>வெஜ் சூப்
>உலர் பழங்கள் மற்றும் விதைகள்
>வெள்ளரிக்காய், கேரட் சாலட்

இரவு உணவு:

>காய்கறி கிச்சடி/பருப்பு கிச்சடி-280 கலோரிகள்
>கிரில் செய்த சிக்கன்/மீன் ஆகியவற்றை காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்-300 கலோரிகள்
>தானிய வகைகளுடன் இணைந்த பருப்பு சூப்-270 கலோரிகள்
>வேகவைத்த காய்கறிகள்-பிரவுன் அரிசியுடன் சேர்த்து சாப்பிடலாம்-290 கலோரிக்கள்

மேலும் படிக்க | சொட்டை விழுந்த இடத்தில் 1 வாரத்தில் முடி வளர இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

10 நாட்களில் 10 கிலோ குறைய..

>தண்ணீர் குடிக்க வேண்டும்:

உடல் எடை குறைய உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். எனவே, ஒரு நாளைக்கு  2 முதல் 3 லிட்டர் தண்ணீர் அருந்துங்கள்

>உடற்பயிற்சி:
ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் உடலுக்கு உழைப்பு கொடுங்கள். நடைப்பயிற்சி, கார்டியோ உடற்பயிற்சி, சைக்ளிங், நீச்சல் பயிற்சி உள்ளிட்டவற்றை செய்யலாம். வீட்டு உடற்பயிற்சிகளும் பயனளிக்கும். 

>தூக்கம்:
உடல் எடையை குறைப்பதற்கு தூக்கம் மிகவும் முக்கியம். தினமும் 7 முதல் 8 மணி நேரம் சரியாக தூங்க வேண்டும்.

>அளவான சாப்பாடு:
டயட் கட்டுப்பட்டில் உங்கள் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சாப்பிடும் போது வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் சாப்பாட்டில் மட்டும் கவனம் செலுத்தவும்.

>பதப்படுத்தப்பட்ட உணவுகள்:
வெளி உணவுகளை முற்றிலும் தவிர்க்கவும். உங்கள் வெயிட் லாஸ் முயற்சியை வீணடிக்காமல், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடாமல் இருங்கள். 

>மருத்துவரை அணுகுவது:
டயட் இருக்க ஆரம்பிக்கையில், அல்லது உங்களது உணவு முறைகளை மாற்றுகையில் உடலில் அசௌகரியங்கள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை ஓட ஓட விரட்ட எலுமிச்சம்பழ நீரில் இதை கலந்து குடிக்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News