அன்லாக் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கிய நிலையில், கொரோனா பரவலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பற்றி முக்கிய செய்தி வந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் மிக அதிக அளவாக, இந்தியாவில் 51 லட்சத்தை தாண்டி விட்டது. இது வரை கொரோனாவினால் 83 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்து விட்டனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கிடைக்கும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் (Union Health Minister Dr.Harsh Vardhan) வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று மாநிலங்களவையில் பேசும் போது, மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், மூன்று தடுப்பு மருந்துகளின் பரிசோதனை வெவ்வேறு கட்டங்களில் நடந்து வருவதாகவும் கூறினார். பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு நிபுணர் குழு இந்த தடுப்பு மருந்து தொடர்பான பரிசோதனைகளை கண்காணித்து வருவதாகவும், அது தொடர்பான பணிகளை மேம்படுத்த திட்டங்களைத் தயாரித்து வருவதாகவும் அவர் கூறினார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வந்து விடும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ALSO READ | கொரோனா பயத்துல குழம்பாதீங்க… தேவையில்லாம யோசிச்சு பதறாதீங்க..!!!
ஜைடஸ் காடிலா ( Zydus Cadila) மற்றும் பாரத் பயோடெக் (Bharat Biotech) ஆகிய இரண்டு உள்நாட்டு தடுப்பூசிகள் முதல் கட்ட பரிசோதனையை முடித்துவிட்டதாக அவர் தெரிவித்தார். இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஒப்புதல் பெற்ற பின்னர் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) மீண்டும் பரிசோதனையை தொடங்கியது.
பாரத் கோவிஷீல்ட் (Bharat Kovishield) என்ற தடுப்பு மருந்தும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இது ஜென்னர் நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) இணைந்து உருவாக்கியது. புனேவை தளமாகக் கொண்ட SII, இந்தியா முழுவதும் 17 சோதனை தளங்களில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
கூடுதலாக, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (RDIF) மற்றும் இந்தியாவை தளமாகக் கொண்ட உலகளாவிய மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட் (Doctor Reddy's Laboratories Ltd) ஆகியவை இந்தியாவில் ஸ்பூட்னிக் வி ( Sputnik V) தடுப்பு மருந்தின் பரிசோதனைகள் மற்றும் அதன் விநியோகம் ஆகியவற்றில் ஒத்துழைக்க ஒப்புக் கொண்டுள்ளன.
இந்தியாவில் ஒழுங்குமுறை அமைப்பி ஒப்புதலின் பேரில், டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு 100 மில்லியன் தடுப்பூசி Sputnik V தடுப்பு மருந்துகளை RDIF வழங்கும். ஸ்பூட்னிக் வி தடுப்பூசி, தொடர்பான மருத்துவ பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ALSO READ | நம் சித்தர்கள் தந்த அற்புத யுக்தி..... கொரோனாவை துரத்தும் ஆற்றல் மிக்க சக்தி...!!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR