இந்தியா ஏற்கனவே 229 லட்சம் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளுக்கு வழங்கியுள்ளது, அதில் 64 லட்சம் டோஸ் மானிய உதவியாகவும், வர்த்தக அடிப்படையில் 165 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் பிப்ரவரி 12 அன்று தெரிவித்துள்ளது.
Covid Vaccination Drive in India Updates: கொரோனா தடுப்பூசி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் பக்க விளைவுகள் தவறானவை என்று கூறியுள்ளார்.
மக்களுக்கு மேலும் நிம்மதி அளிக்கும் வகையில், மேலும் நான்கு கொரோனா தடுப்பூசிகள் விரைவில் இந்தியாவிற்கு கிடைக்கும் என, சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 16 முதல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணியை தொடங்க இந்தியா தயாராகி வரும் நிலையில், இந்த தடுப்பூசி இந்தியாவில் ₹ 200 என்ற விலையில் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
தினமும், கொரோனா தடுப்பூசியின் விலை குறித்து புதிய யூகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இப்போது புதிய செய்தி என்னவென்றால், சீரம் நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியர்கள் 250 ரூபாய் மட்டுமே விலை கொடுக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.
தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர், ஐ.சி.எம்.ஆர், டி.சி.ஜி.ஐ, அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களுக்கு தடுப்பூசி பரிசோதனை, உற்பத்தி மற்றும் விநியோகத்தை நிறுத்த என்ற நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
COVID-19 தடுப்பூசி தயாரிப்பு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்ய பிரதமர் மோடி நவம்பர் 28 அன்று புனேவின் சீரம் இன்ஸ்டிட்யூட்டிற்கு (Serum Institute) செல்ல உள்ளார்.
ஜெர்மன் வார இதழான வெல்ட் ஆம் சோன்டாக்குடன் பேசிய பார்சல், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் விலை, அரசாங்கங்கள் உத்தரவிடும் அளவுகளைப் பொறுத்து இருக்கும் என்று தெரிவித்தார்.
அமெரிக்க-ஜெர்மனி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் தொற்றை திறமையாக கட்டுப்படுத்துவதாக அறிவிப்பை வெளியிட்ட Pfizer நிறுவனம், இது மனித குலத்திற்கு மிகவும் முக்கியமான நாள் என குறிப்பிட்டுள்ளது.
குழந்தைகளை காசநோயிலிருந்து (TB) பாதுகாக்கப் பயன்படும் பி.சி.ஜி தடுப்பூசி, கொரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் உதவும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான உண்மையான தடுப்பூசி இந்திய சந்தையை அடைய ஒரு வருடத்திற்கும் மேல் ஆகும் என்று எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் குலேரியா தெரிவித்துள்ளார்.
இந்தியா, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மிக சிறப்பாக செயல்படுகிறது என்றும் ஆராய்ச்சி, COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டியுள்ளார்,
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.