Calcium: எலும்பையும் பல்லையும் பாதுகாக்க பால் மட்டும் தானா? பாலுக்கு டஃப் பைட் கொடுக்கும் சூப்பர்ஃபுட்கள்

Substitute To Milk For Calcium: பால் குடிக்கத் தயங்குபவர்கள் மற்றும் உடலில் கால்சியம் பற்றாக்குறையால் கவலைப்படுபவரா? உங்கள் உடலில் கால்சியம் குறைபாட்டைப் பூர்த்தி செய்யும் 5 சூப்பர்ஃபுட்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 18, 2024, 07:49 AM IST
  • பால் குடிக்கத் தயங்குபவரா?
  • கால்சியம் பற்றாக்குறையால் கவலைப்படுபவரா?
  • கால்சியம் குறைபாட்டைப் பூர்த்தி செய்யும் 5 சூப்பர்ஃபுட்கள்
Calcium: எலும்பையும் பல்லையும் பாதுகாக்க பால் மட்டும் தானா? பாலுக்கு டஃப் பைட் கொடுக்கும் சூப்பர்ஃபுட்கள் title=

Calcium Rich Foods: கால்சியம், நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. உடலில் உள்ள கால்சியத்தில் சுமார் 99 சதவீதம் நமது எலும்புகள் மற்றும் பற்களில் சேமிக்கப்படுகிறது. மற்ற 1 சதவீதம் உங்கள் இரத்தத்திலும் மென்மையான திசுக்களிலும் உள்ளது. கால்சியம் தான் நமது எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குகிறது என்பதும், இதய ஆரோக்கியம், தசை செயல்பாடுக்கு முக்கிய பங்கு வகிக்கும் கனிமம் கால்சியம் என்பதும் இதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. அதனால் தான் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பால் குடிப்பது அவசியம் ஆகிறது.ஆனால், பால் குடிக்க விரும்பவில்லை அல்லது பால் ஒவ்வாமை இருந்தால், கால்சியம் மிகுந்த சத்தான சுவையான உணவுப் பொருட்களை உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான், உடலில் கால்சியம் குறைபாடு இருக்காது, ஆரோக்கியமும் பலப்படும்.

பால் குடிக்காதவர்களுக்கு கால்சியம் தேவையை பூர்த்தி செய்யும் 5 சூப்பர் உணவுகளை தெரிந்து கொள்ளுங்கள். இந்த உணவுகள் உங்கள் கால்சியத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல் சாப்பிட சுவையானவை.

மேலும் படிக்க | முதுமையை தடுக்கும் மிளகு.. உடலில் இத்தனை கோளாறுகளை நீக்குமா?

டோஃபு
டோஃபு என்பது கால்சியம் நிறைந்த சோயா கலவையில் இருந்து தயாரிக்கப்படும் சீஸ் ஆகும். பால் குடிக்க பிடிக்காதவர்கள்,  டோஃபுவை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம், நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்குத் தேவையான கால்சியம் சத்தை பூர்த்தி செய்ய டோஃபூ நல்ல வழியாகும். டோஃபுவின் பல பிராண்டுகள் சந்தையில் கிடைக்கின்றன, டோஃபுவில் எவ்வளவு கால்சியம் இருக்கிறது தெரியுமா?
 
மத்தி மீன்
நீங்கள் பாலுக்கு நிகராக கால்சியம் சத்து கொண்டது மீன். அதிலும் மத்தி மீன் கால்சியத்தின் சிறந்த தேர்வாக இருக்கும். அசைவ உணவுக்காரர்களுக்கு மட்டுமே மீன் ஒத்து வரும்.  சைவ உணவுக்காரர்களுக்கு மீன் ஒத்துவராது. ஆனால் வங்காளிகள் மீன் சைவ உணவு என்று நம்புவதாகவும் சொல்லப்படுகிறது. மீன் கால்சியம் சத்துக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

அனைத்து வகையான மீன்களிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், மத்தி மீனில் கால்சியம் அதிகமாகக் காணப்படுகிறது. அசைவம் சாப்பிடுபவர்களுக்கு பால் குடிக்கவில்லை என்றாலும் பிரச்சனை இல்லை.  

மேலும் படிக்க | சருமம் பளபளன்னு ஜொலிக்க இந்த மசாலா இலைகளின் ஜூஸ் ஒன்று போதும்

பாதாம்
பாலுக்கு நிகரான கால்சியத்தைக் கொண்டுள்ளது பாதாம். தினமும் பாதாமை உட்கொண்டால், கால்சியம் மட்டுமின்றி, ஆரோக்கியமாக வாழத் தேவையான வேறு பல சத்துக்களும் கிடைக்கும். ஒரு அவுன்ஸ் பாதாம் பருப்பில் 76 மில்லிகிராம் கால்சியம் கிடைக்கும். இது உங்கள் தினசரி தேவையில் 25 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. 

அத்திப்பழம் 
கால்சியம் நிறைந்த உலர் பழங்களில் முதலிடத்தில் அத்திப்பழம் முதல் இடத்தில் உள்ளது. அத்திப்பழம் நார்ச்சத்துக்கான சிறந்த மூலம் என்பதும், இது நமது செரிமான அமைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது. கால்சியம் மற்றும் நார்ச்சத்தைத் தவிர, அத்திப்பழத்தில் இரும்புச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. எனவே அத்திப்பழம் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
 
சியா விதைகள்
உடலுக்குத் தேவையான கால்சியத்தின் அளவை பூர்த்தி செய்ய சியா விதைகள் ஒரு சிறந்த வழியாகும். கால்சியம் தேவையை பூர்த்தி செய்ய பாலுக்கு மாற்றாக சியா விதைகள் இருக்கின்றன. இரண்டு தேக்கரண்டி சியா விதைகளில் 180 mg கால்சியம் காணப்படுகிறது. சியா விதைகளை தினசரி உணவில் சேர்த்து வந்தால், நமது தசைகள் மற்றும் எலும்புகள் வலுவாக இருக்கும்.

மேலும் படிக்க | எச்சரிக்கை! நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்யும் ‘சில’ பழக்கங்கள்!

(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News