Finance Minister நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் இந்த 5 விஷயங்கள் இருக்குமா?

Union BUDGET 2021-22:  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மூன்றாவது பட்ஜெட் தொடர்பாக பலருக்கும் பலவிதமான எதிர்பார்ப்புகள் இருந்தாலும், சில எதிர்பார்ப்புகள் பிரதானமானவை. அதிலும், "இந்தியா கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக மிகப்பெரிய தொற்றுநோய்க்கு பிந்தைய பட்ஜெட்டை பார்த்திருக்காது. அந்த வகையிலும் இது மிகவும் வித்தியாசமான பட்ஜெட்" என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது உண்மை என்பதால், இந்திய மக்கள் மட்டுமல்ல, உலகமே ஆவலாக எதிர்பார்க்கிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 31, 2021, 08:20 PM IST
  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் முக்கியமான விஷயங்கள்
  • பட்ஜெட் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
  • கொரோனாவுக்கு பிந்தைய பட்ஜெட்டீல் சுகாதாரத்துறைக்கு என்ன கிடைக்கும்?
 Finance Minister நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் இந்த 5 விஷயங்கள் இருக்குமா? title=

புதுடெல்லி: Union BUDGET 2021-22:  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மூன்றாவது பட்ஜெட் தொடர்பாக பலருக்கும் பலவிதமான எதிர்பார்ப்புகள் இருந்தாலும், சில எதிர்பார்ப்புகள் பிரதானமானவை. அதிலும், "இந்தியா கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக மிகப்பெரிய தொற்றுநோய்க்கு பிந்தைய பட்ஜெட்டை பார்த்திருக்காது. அந்த வகையிலும் இது மிகவும் வித்தியாசமான பட்ஜெட்" என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது உண்மை என்பதால், இந்திய மக்கள் மட்டுமல்ல, உலகமே ஆவலாக எதிர்பார்க்கிறது.  

‘இதற்கு முன் எப்போதும் இல்லாத’ பட்ஜெட்டை வெளியிடத் தயாராக இருக்கும் நிதியமைச்சரின் பட்ஜெட் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. COVID-19 வழிகாட்டு நெறிமுறையைப் பின்பற்றி இந்த ஆண்டு பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்படவில்லை., வழக்கமாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சிடப்பட்ட பட்ஜெட் ஆவணங்களை கொடுப்பதற்கு பதிலாக, மின்னணு முறையில் விநியோகிக்கப்படும் என்பதால் இது இந்தியாவின் முதல் காகிதமற்ற பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.  

ALSO READ | Budget 2021: இந்தியாவின் முதல் பட்ஜெட்டை வழங்கியவர் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா

திருமதி நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு, வரவு செலவுத் திட்டத்தை வழங்கும் பாரம்பரிய முறையில் மாற்றம் ஏற்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, பட்ஜெட் ஆவணங்களை பெட்டியில் எடுத்துச் செல்லும் காலனித்துவ கால பாரம்பரியத்தை மாற்றிய நிர்மலா சீதாராமன் பட்ஜெட் லெட்ஜர் (ledger) என்ற முறையை அறிமுகப்படுத்தினார், சிவப்பு துணி கோப்புறையில் வைக்கப்பட்ட பட்ஜெட் ஆவணங்களை அவர் எடுத்துச் சென்றார்.  

எதிர்பார்ப்புகள் என்ன?

பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான தொகுப்பு: பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சியில், கொரோனா வைரஸ் (coronavirus) தொற்றுநோயால் ஏற்பட்ட சேதத்திலிருந்து இன்னமும் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிதியமைச்சர், சில துறைகளுக்கு அதிக ஊக்குவிப்புத் தொகுப்புகளை வழங்கக்கூடும். லாக்டவுன் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் ஆதரவை வழங்கும் என்று இந்த மாத தொடக்கத்தில் சீதாராமன் தெரிவித்திருந்தார்.

வரி சலுகைகள்: வரி சலுகைகளை அரசாங்கம் நீட்டிக்க வேண்டும் என்று சம்பளம் வாங்கும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மக்களுக்கு உதவ சுயசார்ப்பு (Atmanirbhar Bharat)  தொகுப்பின் கீழ் இந்த ஆண்டின் பட்ஜெட்டில் முன்பே அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

Also Read | நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் Budget தயாரிப்பு குழு அதிகாரிகள்

வருமான வரி விதிமுறைகளை தளர்த்துவது: மறுபுறம், இந்திய ஷாப்பிங் சென்டர்ஸ் அசோசியேஷன் (Shopping Centres Association of India (SCAI)) நிதி தள்ளுபடியை எதிர்பார்க்கிறது, இந்தத் துறைக்கு வருமான வரி விதிமுறைகளை தளர்த்துவது. சில்லறை வியாபாரம் மற்றும் ஷாப்பிங் சென்டர் தொழிற்துறையை வலுப்படுத்த ஜிஎஸ்டி விதிமுறைகளை மறுசீரமைக்க வேண்டும் என்று தொழில்துறை அமைப்பு தனது பட்ஜெட் பரிந்துரைகளில் கோரிக்கை வைத்துள்ளது.

மலிவு வீட்டுவசதி: வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 24 (பி) விதிமுறைகளில் சில திருத்தங்கள் இந்த ஆண்டு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 24 (ஆ), வரிவிதிப்பு வருமானத்திலிருந்து வீட்டுக் கடன்களுக்கான வட்டியைக் குறைக்க அனுமதிக்கிறது. இதைத் தவிர, தொற்றுநோயால் வேலை இழந்த வீட்டுப் பணியாளர்களும் ஒரு தனி பிரிவின் கீழ் மாதாந்திர தவணை (EMI)/ வாடகையை குறைப்பதாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.

கடன் தள்ளுபடி திட்டம்: விவசாயிகளின் போராட்டங்களுக்கு மத்தியில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை திருப்திப்படுத்துவதற்காக கடன் தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்படலாம். அரசாங்கம் கடன் தள்ளுபடியை அறிவித்தால், கடன்ன் சுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது. இது, அரசாங்கத்தின் மீது விவசாயிகளின் நம்பிக்கையை அதிகரிக்கும்.  

ALSO READ | மீண்டும் தொடங்குகிறது IRCTC இ-கேட்டரிங் சேவை; உணவை ஆர்டர் செய்வது எப்படி..!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News