IND vs ENG 3rd T20, Team India Playing XI: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப். 19ஆம் தேதி தொடங்கி இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில், பல்வேறு நாடுகளில் பல சர்வதேச தொடர்கள், டி20 லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன, நடைபெற இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக ஆசிய நாடான பாகிஸ்தானிலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடைபெற இருக்கும் சூழலில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் ஆசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தானில் அடுத்தடுத்து போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் ஆசிய நாடுகளில்...
இலங்கைக்கு ஆஸ்திரேலியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட வருகை தர உள்ளது. பாகிஸ்தான் நாட்டிற்கு தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பிப்ரவரியில் வருகை தந்து ஓடிஐ பார்மட்டில் முத்தரப்பு போட்டிகளில் விளையாட இருக்கின்றன. தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன.
IND vs ENG 3rd T20: முதலிரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி
இந்தியா - இங்கிலாந்து டி20 தொடரில் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துவிட்டது. மூன்றாவது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் கூட மூன்றாவது போட்டி நிச்சயம் இந்திய அணிக்கு கடினமாகவே இருக்கும். கடந்த போட்டியில் கூட திலக் வர்மாவும் ஆட்டமிழந்திருந்தால் பிரச்னை ஆகியிருக்கும்.
IND vs ENG 3rd T20: அணிக்குள் வரும் ஆல்-ரவுண்டர்
எனவே, இந்திய அணி தனது பிளேயிங் லெவனில் சில மாற்றங்களை செய்து மூன்றாவது போட்டியையும், தொடரையும் வெல்ல வேண்டும் என திட்டமிடும். அந்த வகையில், இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் எதிர்பார்க்கலாம். நிதிஷ் குமார் ரெட்டி, ரின்கு சிங் ஆகியோருக்கு பதில் அணிக்குள் சிவம் தூபே மற்றும் ரமன்தீப் சிங் இருவரும் ஸ்குவாடில் இணைந்திருக்கும் நிலையில், நாளைய போட்டியில் இவர்களுள் ஒருவர் அணிக்குள் வருவார் எனலாம்.
IND vs ENG 3rd T20: சிவம் தூபே ஏன்?
கடந்த போட்டியில் ரின்கு சிங்கிற்கு பதில் விளையாடிய துருவ் ஜூரேல் பெரியளவில் சோபிக்காததால் அவருக்கு பதில் சிவம் தூபே பிளேயிங் லெவனில் இடம்பெறுவார். இதனால், இந்திய அணிக்கு அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோருடன் சேர்ந்து மூன்றாவது வேகப்பந்துவீச்சு ஆப்ஷனும் கிடைக்கும், மிடில் ஆர்டரிலும் அதிரடி பேட்டர் கிடைப்பார். தூபே இடதுகை வீரர் என்பது கூடுதல் சிறப்பாகும்.
IND vs ENG 3rd T20: ஷமிக்கு வாய்ப்பில்லை
ஏற்கெனவே அணியில் அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய் உள்ளிட்ட நான்கு ஸ்பின்னர்கள் உள்ளனர். பவர்பிளேவில் அர்ஷ்தீப், பாண்டியா உடன் வாஷிங்டன் சுந்தர், தூபேவும் கூட பந்துவீசலாம். தூபே மிடில் ஆர்டரிலும் கைக்கொடுப்பார். ஆரம்ப கட்டத்தில் ராஜ்கோட் மைதானத்தில் பவுன்ஸ் இருந்தாலும் அதன்பின் ஆடுகளம் மெதுவாகிவிடும் என்பதால் இந்த பந்துவீச்சு அட்டாகே போதுமானது. இதனால், மூன்றாவது போட்டியிலும் ஷமி இடம்பெற மாட்டார் எனலாம்.
மேலும் படிக்க | விராட் கோலி கேப்டன்சியை நிராகரித்தால்... இவர் தான் ஆர்சிபியின் அடுத்த கேப்டன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ