Union Budget 2021: 2021 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நேற்று நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பலருக்கு பலவித கருத்துகள் உள்ளன.
பட்ஜெட் 2021-22: நாட்டின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். நாட்டின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கியுள்ளார். முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவிப்பதற்காக, இந்த முறை டிஜிட்டல் வடிவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
மோடி அரசாங்கத்தின் நடப்பு நிதியாண்டு 2021 ஆண்டின் மொத்த செலவு ரூ .34.50 லட்சம் கோடி என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். இது முதலில் மதிப்பிடப்பட்ட ரூ. 30.42 லட்சம் கோடியை விட அதிகமாகும்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்ட, இந்தியாவின் மிக முக்கிய துறையான ரயில்வே துறையை புதுப்பிக்கும் முயற்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘பசுமை ரயில்வே' திட்டம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி இந்தத் துறைக்கான மிகப்பெரிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
பட்ஜெட்டுக்கு முன் ஒரு சிறந்த செய்தி உள்ளது. ஜனவரி மாத GST Collection புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன, இந்த முறை எண்ணிக்கை ரூ .1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. GST அமல்படுத்தப்பட்டதிலிருந்து ஜனவரி வசூல் மிக அதிகம்.
பொருளாதார நிவாரணம் பெற எதிர்பார்க்கும் ஒரு சாமானிய மனிதனுக்கு வருமான வரி வரம்பு என்பது ஒரு மிக முக்கியமான அம்சமாகும். 2021 ஆம் ஆண்டின் பட்ஜெட் முன்பு எப்போதும் இல்லாத அளவு வித்தியாசமாக இருக்கும் என நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு, மத்திய பட்ஜெட் முதல் முறையாக காகிதமற்ற வடிவத்தில் வழங்கப்படும். 2021 வரவுசெலவுத் திட்டம் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்திய COVID தொற்றுநோய்க்கு மத்தியில் வழங்கப்படுவதால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.