ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல் விற்பனை: மலிவான விலையில் ஸ்மார்ட்போன்கள்

Flipkart Big Billion Days Sale 2023: குறைந்த விலையில் போன்களை வாங்க வாய்ப்பு! Samsung, Redmi, Realme, Poco ஆகியவை அடங்கும் - ₹ 15,000 க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 3, 2023, 07:16 AM IST
  • குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள்
  • பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை
  • ​​ஸ்மார்ட்போன்களுக்கு ஃப்ளிப்கார்ட்டில் அதிக தள்ளுபடி
ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல் விற்பனை: மலிவான விலையில் ஸ்மார்ட்போன்கள் title=

Smartphones Sales Latest Update: 15,000க்குள் உள்ள ஸ்மார்ட்ஃபோன் வாங்க அரிய வாய்ப்பு. Flipkart விற்பனை தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த விற்பனை அக்டோபர் 8 முதல் 15 வரை நடைபெறும். இந்த ஆண்டு Flipkart Big Billion Days Sale பண்டிகை காலத்திற்கு முன் வரும் சூப்பர் ஜாக்பாட் விற்பனை ஆகும், இதில் ஸ்மார்ட்போன்கள் உட்பட பல கேஜெட்டுகள் பெரும் தள்ளுபடியில் கிடைக்கின்றன. புதிய மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்க திட்டமிடுபவர்களுக்கு, ரூ.15,000க்கு குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இது.

இந்தப் பட்டியலில் Samsung, Redmi, Realme, Oppo, Poco போன்ற பல ஸ்மார்ட்போன்கள் உள்ளன. எந்த போன் என்ன விலையில் கிடைக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

Oppo A38, Redmi Note 12, Realme 11x 5G மற்றும் Samsung Galaxy F13 ஸ்மார்ட்போன்கள் போன்ற பிரபலமான மாடல்களில் (Best Smartphones to buy) பெரும் தள்ளுபடிகள் கிடைக்கும். இவற்றில் Flipkart அதிக தள்ளுபடியை வழங்குகிறது. நத்திங் ஃபோன் 1, Samsung Galaxy Z Fold 5, Galaxy Z Flip 5, Pixel 7 மற்றும் Oppo Reno 10 Pro 5G ஸ்மார்ட்போன்கள் போன்ற மலிவு விலையிலான ஸ்மார்ட்போன்களுக்கும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது.

மேலும் படிக்க | பழைய ஸ்மார்ட்போன் இருந்தா தூக்கி வீசிராதீங்க... நல்ல வருவாய் வரும் ஒரு வழி இருக்கு

15,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் சிறந்த பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம். Flipkart Big Billion Days Sale விற்பனையில், பட்ஜெட்டில் வாங்கக்கூடிய சில ஃபோன்களின் பட்டியல் இது...

smartphones sale

இது தவிர, வாடிக்கையாளர்கள் Samsung Galaxy F13, Moto G32, Vivo V29e, Poco M5, Realme 11x 5G மற்றும் Infinix Hot 30 ஆகியவற்றில் பெரும் தள்ளுபடியைப் பெறுகின்றனர். ஒன்று இரண்டல்ல, பல ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம். உங்கள் பாக்கெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போனை (Smartphones under 15,000) வாங்க திட்டமிட்டால், ரூ.15,000க்கு குறைவான விலையுள்ளவை ஃப்ளிப்கார்ட்டில் பெரும் தள்ளுபடியைப் பெறுகின்றன.

இவற்றைத் தவிர, இருபதாயிரம் ரூபாய்க்கு கீழே கிடைக்கும் ஸ்மார்போன்களும் சிறப்பான தள்ளுபடியை பெறுகின்றன.

தள்ளுபடி விற்பனையில் சிறப்பான ஸ்மார்ட்போன்கள் 

Samsung Galaxy F13ன் விலை ரூ.14,999க்கு பதிலாக ரூ.9,199 
Samsung Galaxy F04 க்கான விலை ரூ. 11,499க்கு பதிலாக ரூ. 6,499
Realme C55 விலை ரூ.12,999க்கு பதிலாக ரூ.9,499க்கு விற்பனை.
Realme 10 Pro 5G விலை, ரூ.15,999 
Realme 11x 5Gக்கான விலை ரூ. 16,999க்கு பதிலாக ரூ. 14,999 
Moto G32  ரூ.9,999க்கு கிடைக்கிறது.
Moto G14 ஸ்மார்ட்போன் ரூ.12,999க்கு பதிலாக ரூ.8,999க்கு கிடைக்கிறது.
Oppo A17K விலை ரூ.10,999க்கு பதிலாக ரூ. 7,999 

மேலும் படிக்க | உங்கள் இன்ஸ்டா ரீல்ஸ் வைரல் ஆக வேண்டுமா...பணமும் அள்ளலாம்! - இந்த டிப்ஸை முயற்சித்து பாருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News