PM Kisan Yojana: இந்த விவசாயிகளுக்கு 13-வது தவணை கிடைக்காது! ஏன் தெரியுமா?

PM Kisan Yojana: பீகார் விவசாயத் துறையின் இணையதளத்தின்படி, ஆதார் மற்றும் என்பிசிஐ உடன் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகள் கொண்ட விவசாயிகளுக்கு பிஎம் கிசான் யோஜனா திட்டத்தின் பலன் கிடைக்காது.  

Written by - RK Spark | Last Updated : Feb 21, 2023, 06:53 AM IST
  • பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் விரைவில் விவசாயிகளுக்கு 13வது தவணை வழங்கப்பட உள்ளது.
  • பயோமெட்ரிக்ஸ் தகவல்களுடன் இ-கேஒய்சி-ஐ அப்டேட் செய்துகொள்ளலாம்.
  • ரூ.2000 என மூன்று தவணையாக ஆண்டுதோறும் ரூ.6000 நிதியுதவி வழங்கப்படுகிறது.
PM Kisan Yojana: இந்த விவசாயிகளுக்கு 13-வது தவணை கிடைக்காது! ஏன் தெரியுமா? title=

PM Kisan Yojana: பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்பது இந்திய விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டமாகும், இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ரூ.2000 என ஆண்டுதோறும் ரூ.6000 நிதியுதவி வழங்கப்படுகிறது.  தகுதியான விவசாயிகளுக்கு தற்போது வரை 12வது தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் 13வது தவணை வழங்கப்பட உள்ளது.  இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறாத விவசாயிகள் பிஎம் கிசான் யோஜனா இணையதளத்தில் பதிவு செய்து நன்மையடையலாம்.  பீகார் விவசாயத் துறையின் இணையதளத்தின்படி, ஆதார் மற்றும் என்பிசிஐ உடன் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகள் கொண்ட விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் பலன் கிடைக்காது. அடுத்த தவணையைப் பெற, விவசாயிகள் அஞ்சல் அலுவலகத்தில் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் (ஐபிபிபி) டிபிடி இயக்கப்பட்ட வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ICCR: அடல் பிஹாரி வாஜ்பாய் பொது உதவித்தொகை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்

பிஎம் கிசான் திட்டத்தின் நன்மைகளை பெற விரும்பும் விவசாயிகள் இ-கேஒய்சி செய்ய வேண்டியது அவசியம்.  திட்டத்தை பெற விரும்பும் நபர்கள் தங்கள் ஆதாரை பிஎம்-கிசான் போர்டல் மற்றும் மொபைல் எண்ணுடன் ஓடிபி மூலம் இணைக்கலாம் அல்லது அருகிலுள்ள மையங்களுக்குச் சென்று பயோமெட்ரிக்ஸ் தகவல்களுடன் இ-கேஒய்சி-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம்.  எஸ்பிஐ வங்கி கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்து வைத்திருப்பவர்கள், 567676 என்ற எண்ணுக்குச் செய்தி அனுப்புவதன் மூலம், தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்கலாம்.  மொபைல் எண் பதிவு செய்யப்படாவிட்டாலோ அல்லது ஏற்கனவே கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டிருந்தாலோ எஸ்எம்எஸ் மூலம் செய்தி அனுப்பப்படும்.  இந்த செயல்முறை சரியாக நிறைவுறாவிட்டால் இந்த செயல்முறையை நிறைவு செய்ய நீங்கள் அருகிலுள்ள எஸ்பிஐ வங்கி கிளைக்கு செல்ல வேண்டும்.

1) இ-கேஒய்சி செயல்முறையை முடிக்க, விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் யோஜனாவின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

2) இப்போது இ-கேஒய்சி ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

3) அதன் பிறகு ஆதார் எண் மற்றும் கேப்ட்சா தகவலை உள்ளிட வேண்டும்.

4) இப்போது உங்கள் மொபைலுக்கு எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.

5) பின்னர் பெறப்பட்ட ஓடிபி-ஐ உள்ளிட்டு தொடர வேண்டும்.

6) இப்போது உங்கள் இ-கேஒய்சி செயல்முறை வெற்றிகரமாக முடிக்கப்படும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி! ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News