ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

2023 பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி செலுத்துவதில் சில மாற்றங்களை அறிவித்ததை தொடர்ந்து ஏப்ரல் 1 முதல் புதிய வருமான விதிகள் அமலுக்கு வரவுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Mar 28, 2023, 06:39 AM IST
  • ரூ. 15 லட்சத்துக்கு மேல் வருமானம், வரி விகிதம் 30%.
  • NIL முதல் ரூ. 3 லட்சம் வருமானம் வரை, வரி விதிக்கப்படாது.
  • ரூ. 9 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை வருமானம் இருந்தால், வரி விகிதம் 15% ஆக இருக்கும்.
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க! title=

ஒவ்வொரு நிதியாண்டிலும் அரசு வருமான விதிகளில் சில திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.  அந்த வகையில் வரவிருக்கும் நிதியாண்டு (2023-24) ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்குகிறது, 2023 பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி செலுத்துவதில் சில மாற்றங்களை அறிவித்தார்.  ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வரும் புதிய வரி விதிகள் வரி செலுத்துவோர் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

1) தற்போது ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு புதிய வருமான விதிகள் பற்றி பார்க்கலாம்.

- ரூ. 15 லட்சத்துக்கு மேல் வருமானம், வரி விகிதம் 30%

- ரூ. 12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை வருமானம் இருந்தால், வரி விகிதம் 20% ஆக இருக்கும்.

- ரூ. 9 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை வருமானம் இருந்தால், வரி விகிதம் 15% ஆக இருக்கும்.

- ரூ. 6 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரை வருமானம் இருந்தால், வரி விகிதம் 10% ஆக இருக்கும்.

- ரூ. 3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை வருமானம் இருந்தால், வரி விகிதம் 5% ஆக இருக்கும்.

- NIL முதல் ரூ. 3 லட்சம் வருமானம் வரை, வரி விதிக்கப்படாது.

மேலும் படிக்க | பங்கு சந்தை முதலீட்டில் ஆயிரத்தை கோடிகளாக்க வேண்டுமா... சில முதலீட்டு டிப்ஸ்!

2) வருமான வரி செலுத்த வேண்டிய அடிப்படை விலக்கு வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  ரூ. 15 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக 30% வரை வரி விதிக்கப்படும் .

3) புதிய வரி விதிப்பின் கீழ் ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கான கூடுதல் கட்டணம் 37% லிருந்து 25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்னர் ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு உயர் கட்டணம் 37% ஆக இருந்தது.  தற்போது புதிய வரி விதிப்பின் கீழ், இந்தப் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுக்கும் தனிநபர்களுக்கு ரூ. 2 கோடிக்கு மேல் வருமானம் இருந்தால் அவர்கள் குறைவாகவே கட்டணம் செலுத்தி கொள்ளலாம்.

புதிய வரி விதியின்படி கீழ் திருத்தப்பட்ட கூடுதல் கட்டண விகிதங்கள்:

- ரூ. 50 லட்சத்திற்கு மேல் வரி விதிக்கக்கூடிய வருமானம் ஆனால் ரூ. 1 கோடி வரை : 10%

- வரி விதிக்கக்கூடிய வருமானம் ரூ. 1 கோடிக்கு மேல் ஆனால் ரூ. 2 கோடி வரை : 15%

- ரூ. 2 கோடிக்கு மேல் வரி விதிக்கக்கூடிய வருமானம்: 25%.

4) தனிநபர்கள் மற்றும் HUF-கள் ஒவ்வொரு நிதியாண்டிலும் பழைய மற்றும் புதிய வரி முறைகளில் ஒன்றைத் தேர்வுசெய்யும் விருப்பத்தைப் பெறுவார்கள், அவர்களுக்கு வணிக வருமானம் இல்லை.

5) பிரிவு 87A படி இரண்டு வருமான வரி விதிகளின் கீழ் தள்ளுபடி கிடைக்கும். பழைய வரி முறையின் கீழ், ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு ரூ. 12,500 தள்ளுபடி கிடைக்கும்.  புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ரூ. 7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு தள்ளுபடி ரூ. 25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  பட்ஜெட் 2023 புதிய வருமான வரி விதிப்பின்படி தள்ளுபடி வரம்பை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தியுள்ளது.

6) புதிய வரி விதிப்பு முறை அமல்படுத்தப்படுவதால் எந்த விருப்பத்தை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் நிலவுகிறது.  எனவே  2023-24 நிதியாண்டில் எந்த வருமான வரி முறை சிறப்பாக இருக்கும் என்பதை தேர்வு செய்ய அவர்களுக்கு வருமான வரித் துறை 'வருமான வரி கால்குலேட்டரை' அறிமுகப்படுத்தியுள்ளது.

7) புதிய வரி விதிப்பின் கீழ் சம்பளம் பெறும் தனிநபர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ரூ. 50,000 நிலையான விலக்கினால் பயனடைவார்கள்.  பழைய வரி முறையின் கீழ் வழங்கப்பட்ட நிலையான விலக்கில் எந்த மாற்றமும் இல்லை.

8) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ) உள்ளிட்ட குறிப்பிட்ட வணிகங்களுக்கான வரம்பு  44ஏடி பிரிவின் கீழ் ரூ. 2 கோடியிலிருந்து ரூ. 3 கோடியாக நிதியமைச்சர் திருத்தியுள்ளார்.  பட்ஜெட் 2023-ல் பிரிவு 44 ஏடிஏ-வும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது மற்றும் குறிப்பிட்ட தொழில்களுக்கான வரம்பு ரூ. 50 லட்சத்திலிருந்து ரூ. 75 லட்சமாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வரிச் சலுகையுடன் நல்ல வருமானம் தரும் FD... 8.1% வட்டியுடன் வரி சேமிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News