E-Shram Card: நமது நாட்டில் பலர் பல வித பணிகளை மேற்கொண்டுள்ளார்கள். சிலர் அரசுப் பணிகளில் இருக்கிறார்கள். சிலர் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல வித நன்மைகள் கிடைக்கின்றன.
அமைப்புசாரா துறைகள்
எனினும், நமது நாட்டில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் அமைப்புசாரா துறைகளிலும் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு வேலைக்கான பாதுகாப்பு எதுவும் இல்லை. இவர்களுக்கு இன்று வேலை இருக்கும், நாளை இருக்காது. ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கிடைப்பது போன்ற வசதிகளும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. எனினும், இதை கருத்தில் கோண்டு கடந்த சில ஆண்டுகளில் அரசு அவர்களுக்காக பிரத்யேகமாக பல நலத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
இப்படிப்பட்ட பணியாளர்களுக்காக, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன் பெயர் இ-ஷ்ரம் திட்டம் (E-Shram Yojana). சமீபத்தில், இது தொடர்பாக அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுத்தள போர்ட்டலான இ-ஷ்ரம், மூன்றாண்டுகளில் 30 கோடி பதிவுக்கான இலக்கைத் தாண்டியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகையை பெற முடியும். இதற்கான வழிமுறைகள் என்ன? இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
2 லட்சம் காப்பீடு கிடைக்கும்
- இ-ஷ்ரம் திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் நபர்களுக்கு, அரசாங்கத்தின் மூலம் பல நன்மைகள் வழங்கப்படுகின்றன.
- இத்திட்டத்தின் கீழ், நிதியுதவி தவிர, 2 லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீட்டின் பலனும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
- வியாபாரிகள், காய்கறி விற்பனையாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் சிறிய வேலைகளை செய்யும் இளைஞர்கள் என நாட்டின் அனைத்து தொழிலாளர்களும் இ-ஷ்ரம் கார்டு திட்டத்தின் பலன்களைப் பெற முடியும்.
- எனினும், வரி செலுத்தும் நபர்கள் மற்றும் தொழில்களை சொந்தமாகக் கொண்டிருக்கும் தொழிலதிபர்கள் ஆகியோருக்கு இந்த சலுகை வழங்கப்படாது.
இ-ஷ்ரம் திட்டம்: இதன் நன்மைகள் யாருக்கு கிடைக்கும்?
இ-ஷ்ரம் போர்ட்டலில் (E-Shram Portal) பதிவு செய்த சில நாட்களுக்குப் பிறகு, தொழிலாளர்களின் அட்டை உருவாக்கப்படுகின்றது. இந்த போர்ட்டலின் கீழ், நாட்டின் அனைத்து தொழிலாளர்களும் ஒரே தளத்தில் இணைக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, எதிர்காலத்தில் மத்திய அரசு ஏதேனும் ஒரு திட்டத்தை தொடங்கினால், அது இந்த போர்ட்டலின் வழியாக, பதிவு செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் பலன்களை வழங்கும். தற்போது இந்த போர்டலில் பதிவு செய்பவர்களுக்கு ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இ-ஷ்ரம் திட்டம்: இதில் விண்ணப்பிப்பதற்கான முழுமையான செயல்முறையை இங்கே காணலாம்:
- இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்ய, சில ஆவணங்கள் தேவைப்படுகின்றன.
- இ-ஷ்ரம் போர்ட்டலில் விண்ணப்பிக்கும் நபரிடம், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமான சான்றிதழ், வங்கி பாஸ்புக் போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும்.
- e-Shram கார்டைப் பெற, விண்ணப்பதாரர் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
- அதற்கு முதலில் நீங்கள் e-Shram போர்ட்டலுக்குச் செல்ல வெண்டும்.
- இதில் Register on e-Shram விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பின்னர் மொபைல் எண் மற்றும் OTP ஐ உள்ளிடவும்.
- இதற்குப் பிறகு இ-ஷ்ரம் கார்டு படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
- இதனுடன் உங்கள் பதிவு செயல்முறை நிறைவடையும்.
- இறுதியாக உங்கள் இ-ஷ்ரம் கார்டை (e-Shram Card) ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ