வடகொரியா, வெனிசுலா, சாட் உள்ளிட்ட 8 நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா செல்ல தடை விதித்து உள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்.
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைய மக்களை கட்டுப்படுத்த அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் பல்வேறு திட்டங்கள் கட்டுப்பாடுகளை விதித்தார். இதை எதிர்த்து அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் டிரம்ப்ப விதித்ததடைக்கு தடை விதிக்க அந்நாட்டு கோர்ட் மறுத்து விட்டது.
இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த பயண தடை சட்டம் முதற்கட்டமாக வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் வடகொரியா, வெனிசுலா உள்ளிட்ட 8 நாட்டு குடிமகன்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடை செய்யப்பட்ட நாடுகளில் உள்ள அரசு அதிகாரிகள் அரசு சம்மந்தமாக சந்திப்புகளில் கலந்து கொள்ள அவர்களுக்கு மட்டும் விலக்க அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மக்களின் பாதுகாப்பு கருதியே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட 8 நாட்டின் விவரங்கள்:-
( வடகொரியா, வெனிசுலா, ஈரான், சாட், லிபியா, சிரியா, ஏமன், சோமாலியா ) ஆகிய நாட்டு குடிமகன்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை.