பாகிஸ்தானில் பக்ரீத் தொழுகையில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 15 பேர் காயம் அடைந்தனர்.
பக்ரீத் பண்டிகையையட்டி பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள மசூதியில் இன்று சிறப்பு தொழுகை நடந்தது. அப்போது மசூதிக்கு வெளியே தற்கொலை படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தான். அதில் தொழுகையில் பங்கேற்ற 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் போலீஸ் காரர்கள் ஆவர். இதே போன்று மற்றொரு மசூதியில் தற்கொலை தாக்குதல் நடத்த முயன்ற ஒரு தீவிரவாதி பிடிபட்டான். அதன் மூலம் அங்கு நடக்க இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
இதனையடுத்து முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எந்தஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.