சவூதியில் இருந்து மும்பை புறப்பட்ட ரியாத் விமானம், ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளாக நேரிட்டது!
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில் இருந்து 142 பயணிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகளுடன் மும்பைக்கு புறப்பட்ட B737-800 என்ற விமானம் டேக் ஆஃப் ஆவதற்காக முன்னதாக ஓடுபாதையில் சீறிப்பாய்ந்த வரும்போது சறுக்கல் ஏற்பட்டு விபத்துக்குள்ளாக நேரிட்டது.
இந்த சம்பவத்தை முன்கூட்டிய அறிந்த விமானப் பயணி, விமானம் புறப்படுவதற்கு முன்னதாக ஓடுபாதையில் வைத்தே விமானத்தை துரிதமாக நிறுத்தியுள்ளார் என சிவில் விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
We are working to make alternate travel arrangements for our guests from Riyadh. Our flight operations across the network including services to and from Riyadh remain unaffected.
— Jet Airways (@jetairways) August 3, 2018
மேலும் இச்சம்பவத்தில், விமானத்தில் இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக இறக்கப்பட்டு, விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு என்னவென்று அறிவது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட பயணிகளை வேறு விமானத்தில் மாற்றி அனுப்புவது தொடர்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!
who together with our crew, are currently in the airport lounge, as they await recovery of their travel documents from the aircraft (2/2)
— Jet Airways (@jetairways) August 3, 2018