புத்தாண்டு 2025 தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. முடிவடையப் போகும் 2024 ஆம் ஆண்டு, புதிய இந்தியா என்னும் இலட்சியத்தை நோக்கி நகரும் வகையில் பல சிறந்த திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் இந்தியாவின் வல்லரசுக் கனவை நனவாக்குவது மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டி சுயதொழில் செய்யவும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
PM வித்யாலக்ஷ்மி திட்டம்
மத்தியஅரசு, நாட்டின் கல்வித் துறையில் இளைஞர்களை முன்னேற்ற பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி போன்ற திட்டங்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தரமான உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள், கல்வி கட்டணம் மற்றும் பிற செலவுகளுக்கு உதவும் வகையில் பிணை ஏதும் இல்லாமல் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் கிடைக்கும். அதோடு, அரசிடமிருந்து வட்டி மானியமும் கிடைக்கும். நவம்பர் 6ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு வட்டியில் மானியம்
பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டத்தின் கீழ், மாணவர்கள் எந்தவித பிணையும் இல்லாமல் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். அதே நேரத்தில், 7.5 லட்சம் ரூபாய் வரையிலான கடனில், மாணவர்கள் 75 சதவீதம் வரை அரசாங்கத்தின் கடன் உத்தரவாதத்தைப் பெறுவார்கள். இத்திட்டத்தின் கீழ், குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சமாக இருக்கும் மாணவர்களுக்கு வட்டியில் முழு மானியம் கிடைக்கும். இது தவிர ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கு 3 சதவீதம் வட்டி மானியம் கிடைக்கும்.
பீமா சகி திட்டம்
பொருளாதார மட்டத்தில் பெண்களை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். 18 முதல் 70 வயதுக்குட்பட்ட பெண்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், எல்ஐசி என்னும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பீமா சாகி திட்டத்தின் பயனைப் பெறலாம், இத்திட்டத்தின் கீழ் பெண்கள் காப்பீட்டு முகவர்களாக சேரலாம். பீமா சகி திட்டத்தின் மூலம் காப்பீடு தொடர்பான விழிப்புணர்வு ஊக்குவிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ், பெண்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு சிறப்புப் பயிற்சியும் வழங்கப்படும். பயிற்சி காலத்தில் அவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படும். முதலில் ஹரியானாவில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் அதன்பின் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டம்
நாட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின்லனுக்காக, இந்த ஆண்டு மிக முக்கிய அறிவிப்பு வெளியானது . ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் விரிபடுத்தும் வகையில் செப்டம்பர் 11, 2024 அன்று இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் கீழ், இப்போது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட நாட்டின் அனைத்து முதியோர்களுக்கும் (எந்த சமூக மற்றும் பொருளாதார நிலையிலிருந்து வந்தாலும்) ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கப்படும்.
PM சோலார் மின்சக்தி திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை பிப்ரவரி 15, 2024 அன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், நாட்டு மக்கள் தங்கள் வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல்களை நிறுவ மானியம் வழங்கப்படும். சூரிய எரிசக்திகான சோலார் பேனல்களை வீடுகளில் மேல் கூரைகளில் நிறுவ, மத்திய அரசு நிதி உதவி வழங்கும். இதில் 2 கிலோவாட் திறன் கொண்ட அமைப்புக்கு 60% மானியமும், 2 முதல் 3 கிலோவாட் திறன் கொண்ட சோலார் பேனல் அமைப்புகளுக்கு 40% நிதியுதவி கிடைக்கும். அதாவது, 3 கிலோவாட்டுக்கு ரூ.78,000 மானிய உதவியும், 2 கிலோவாட் திறன் கொண்ட சோலார் அமைப்புக்கு ரூ.60,000 மானியமும், 1 கிலோவாட் திறன் கொண்ட அமைப்புக்கு ரூ.30,000 மானியமும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Budget 2025: ரயில் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம் வரலாம்.. விலை கூடுமா, குறையுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ