Manmohan Singh | மன்மோகன் சிங் காலமாகியிருக்கும் நிலையில் அவரைப் பற்றி நீங்கள் அறிந்திராத 9 முக்கிய தகவல்கள்
Manmohan Singh Facts | மன்மோகன் சிங் பிறப்பு முதல் காலமானது வரையிலான அவரது வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான தகவல்கள்.
மன்மோகன் சிங் (Manmohan Singh), குர்முக் சிங் மற்றும் அம்ரித் கவுருக்கு செப்டம்பர் 26, 1932 அன்று பிரிக்கப்படாத இந்தியாவின் (தற்போது பாகிஸ்தான்) பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கா கிராமத்தில் பிறந்தார், சிங் 1948 ஆம் ஆண்டு பஞ்சாபில் தனது மெட்ரிகுலேஷன் முடித்தார். அவரது கல்வி வாழ்க்கை அவரை பஞ்சாபிலிருந்து கேம்பிரிட்ஜ், இங்கிலாந்திற்கு அழைத்துச் சென்றது.
மன்மோகன் சிங், 26/09/1932 பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1952 மற்றும் 1954இல் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றார். மேற்படிப்பிற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற மன்மோகன் சிங் 1957 ம் ஆண்டு ஆண்டு பொருளாதார டி.பில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
1962ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டி.ஃபில் பட்டமும் 1971ல் வர்த்தக அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராக அரசியல் வாழ்க்கையை துவங்கினார் மன்மோகன் சிங். அதன் பின்பு தலைமை பொருளாதார ஆலோசகர் மற்றும் நிதி அமைச்சகத்தின் செயலாளர் போன்ற முக்கிய பதவிகளை வகித்தார்.
1987ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை ஜெனீவாவில் உள்ள UNCTAD செயலகத்தில் சிறிது காலம் பணியாற்றிய மன்மோகன் சிங் தெற்கு ஆணையத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
நிதி அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், பிரதமரின் ஆலோசகர் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஆகிய பதவிகள் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டது.
1991ஆம் ஆண்டு நரசிம்மராவ் தலைமையிலான அரசில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங், 1991ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நாட்டின் பொருளாதார தாராளமயமாக்கலின் அடித்தளமாக இந்த பட்ஜெட் கருதப்படுகிறது.
மன்மோகன் சிங், இந்தியாவின் 14வது பிரதமராக, 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் நாட்டை வழிநடத்தினார். ஒரு காலத்தில் தனது கிராமத்தில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்த சிங், பின்னர் புகழ்பெற்ற கல்வியாளரானார்.
1990 களின் முற்பகுதியில் இந்தியாவை தாராளமயமாக்கல் பாதையில் கொண்டு சென்றதற்காக மன்மோகன் சிங் பாராட்டப்பட்டார். அவரது பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் கூட பாராட்டினர்.
மன்மோகன் சிங் கடைசியாக 2023 ஆகஸ்ட் 7 அன்று பாராளுமன்றத்திற்கு வந்தார். டெல்லி சேவைகள் மசோதா தொடர்பாக ராஜ்யசபாவில் விவாதம் நடந்து வந்தது. இந்த மசோதாவை ஆதரித்து வாக்களிக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் நாடாளுமன்றத்துக்கு வந்தார். மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் நாடாளுமன்றத்துக்கு வந்தபோது, பிரதமர் மோடி அவரை வெகுவாகப் பாராட்டினார்.
இந்திய பொருளாதாரத்தை மாற்றியமைத்த மிகப்பெரும் ஞானியான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தன்னுடைய 92 வயதில் டிசம்பர் 26, வியாழக்கிழமை இரவு காலமானார். அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்திய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.