அஸ்தமனமாகும் குரு.... இந்த அதிர்ஷ்ட ராசிகளுக்கு 2025 புத்தாண்டில் விடியல் காத்திருக்கு...

குரு பெயர்ச்சி 2025: 2025ம் ஆண்டு சில நாட்களில் பிறக்க இருக்கும். ஜோதிட பார்வையில் இந்த ஆண்டு மிகவும் சிறப்பானதாக இருக்கும். மிக முக்கிய நிகழ்வுகளான சனி பெயர்ச்சியும் குரு பெயர்ச்சியும் நிகழ இருப்பதே இதற்கு காரணம்.

குரு அஸ்தமனம் 2025: தேவர்களின் குரு என அழைக்கப்படும் குரு பகவான் ஜூன் 12ம் தேதி அஸ்தமாகிறார். குரு பகவான் அஸ்தமனம் ஆவதால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /8

குரு பகவான்: தற்போது ரிஷப ராசியில் உள்ளார். அவர் 2025 ஆம் ஆண்டு மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். 2025 மே 14 அன்று மிதுனத்தில் குரு பெயர்ச்சி நடக்கும். அதன் பின்னர், குரு 27 நாட்களுக்கு அஸ்தமனம் ஆகிறார். ஜூன் 12 முதல் ஜூலை 9 வரை அஸ்தம நிலையில் இருப்பார். இதனால், ஐந்து ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

2 /8

மேஷம்: 2025ஆம் ஆண்டில் நடக்கும் குரு அஸ்தமனம் மேஷ ராசிக்கு விசேஷ பலன்களைக் கொடுக்கும். பதவி உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தொழிலில் பொருளாதார விரிவாக்கம் ஏற்படும். முதலீடு மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். நிதி நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

3 /8

ரிஷபம்: புத்தாண்டில் குரு அஸ்தமனத்தினால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் முதலீடு நல்ல பலனைத் தரும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். கை வைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் பெறலாம்.  

4 /8

கடகம்: புத்தாண்டில் குரு அஸ்தமனத்தினால் கடக ராசிக்காரர்கள் வருமானத்தில் அபரிமிதமான உயர்வைக் காண்பார்கள்.  பணி மாறுதலுடன், பதவி உயர்வும் கை கூடும். திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கை அமையும்.   

5 /8

துலாம்: புத்தாண்டில் குரு அஸ்தமனம் துலாம் ராசிகளுக்கு விடியலைக் கொடுக்கும். பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். வருமானம் உயரும். பணத்தை சிறப்பாக சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். வேலை, தொழில் சம்பந்தமாக போட்ட பொருளாதார திட்டம் நிறைவேறும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். 

6 /8

மீனம்: புத்தாண்டில் குரு அஸ்தமனம் ஆவது மீன ராசிகளுக்கு மங்களகரமானதாகவும் பலன் தருவதாகவும் கருதப்படுகிறது. புத்தாண்டில் கூடுதல் வருமானம் அதிகரிக்கும். பழைய கடன்களில் இருந்து விடுபடலாம். பழைய முதலீட்டிலிருந்தும் பெரிய நிதி ஆதாயங்கள் இருக்கலாம். திருமண வாழ்க்கையில் உங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

7 /8

குரு வக்ர நிவர்த்தி 2025: குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் உள்ள நிலையில், குரு பெயர்ச்சிக்கு முன்னர்தாக, 2025 பிப்ரவரி மாதம் குரு வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். 2025 பிப்ரவரி மாதத்தில் நடக்கவுள்ள குரு வக்ர நிவர்த்தி மற்றும் 2025 மே மாதத்தில் நடக்கவுள்ள குரு பெயர்ச்சி காரணமாக உருவாகும் கஜகேசரி யோகமும் சில ராசிகளுக்கு புத்தாண்டில் பலன் தரும்.   

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.