அஸ்வின் இதுவரை இந்த அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கூட விளையாடியது இல்லை!

இந்திய அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக இருந்த அஸ்வின் ஆஸ்திரேலியா தொடர் முடிவதற்குள் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1 /6

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்டுக்குப் பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

2 /6

தமிழகத்தில் இருந்து இந்திய அணிக்கு விளையாடிய வீரர்களில் முக்கியமான ஒருவராக பார்க்கப்படுகிறார் அஸ்வின். ஆல்ரவுண்டராக பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.

3 /6

அஸ்வின் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் உலக அளவில் 7வது இடத்தில் உள்ளார்.

4 /6

இருப்பினும் 13 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் அஸ்வின் ஒருமுறை கூட பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடியது இல்லை.

5 /6

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் பதற்றம் காரணமாக, 2007ம் ஆண்டுக்கு பிறகு இரு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடியது இல்லை.  

6 /6

பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடாதது என்னுடைய நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாக உள்ளது என்று அஸ்வின் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.