Central Government Employees: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2025 புத்தாண்டு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கப் போகிறது. தீபாவளிக்கு முன்பே, மோடி அரசாங்கம் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவற்றை 3% அதிகரிப்பதாக அறிவித்தது. அதன் காரணமாக தற்போது மொத்த டிஏ மற்றும் டிஆர் 53% ஆக அதிகரித்துள்ளது. இப்போது புதிய ஆண்டில் மீண்டும் ஒருமுறை DA, DR அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
Pensioners: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மேலும் பல பரிசுகள்
அகவிலைபடியை தவிர, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மேலும் பல பரிசுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிசுகளில் 18 மாத டிஏ அரியர் தொகை, நிலுவையில் உள்ள டிஏ பாக்கிகள், பிற கொடுப்பனவுகளில் அதிகரிப்பு மற்றும் ஊதியக் கட்டமைப்பின் திருத்தம் ஆகியவை அடங்கும். இந்த சாத்தியமான நன்மைகள் அனைத்தையும் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
DA Hike Calculation: அகவிலைப்படி கணக்கீடு
அகவிலைப்படி (DA) என்பது அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு முக்கிய பகுதியாகும். இது பணவீக்கத்தின் தாக்கத்தை குறைக்க வழங்கப்படுகிறது. DA என்பது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை - ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை திருத்துகிறது.
Dearness Allowance Calculation Formula: டிஏ கணக்கிட பின்வரும் சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது:
மத்திய அரசு ஊழியர்களுக்கு:
டிஏ% = [(கடந்த 12 மாதங்களுக்கு AICPI இன் சராசரி (2001 அடிப்படை ஆண்டு = 100) – 115.76) / 115.76] x 100
பொதுத்துறை ஊழியர்களுக்கு:
டிஏ% = [(கடந்த 3 மாதங்களுக்கு AICPI இன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001 = 100) – 126.33) / 126.33] x 100
ஜூலை முதல் அக்டோபர் 2024 வரை AICPI குறியீடு 144.5ஐ எட்டியது. இதன் மூலம் டிஏ மதிப்பெண்ணை 55.05% ஆக உள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பரில் இந்தக் குறியீடு 145.3ஐ எட்டினால், ஜனவரி 2025ல் டிஏ 56% அதிகரிக்கலாம்.
Salary Hike, Pension Hike: டிஏ 3% அதிகரித்தால், ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
டிஏ அதிகரிப்பு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக:
- ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 எனில், 3% டிஏ உயர்வு அவரது சம்பளத்தை ரூ.540 அதிகரிக்கும்.
- அதிகபட்சமாக ரூ.2,50,000 சம்பளம் பெறும் ஊழியரின் சம்பளம் ரூ.7,500 அதிகரிக்கும்.
- குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9,000 பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.270 கூடுதலாக வழங்கப்படும்.
- அதிகபட்சமாக ரூ.1,25,000 ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரரின் ஓய்வூதியம் ரூ.3,750 அதிகரிக்கும்.
18 Months DA Arrears: 18 மாத அரியர் தொகை வழங்கப்படுமா?
கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில், ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 30, 2021 வரை டிஏ உயர்வை அரசாங்கம் முடக்கியது. இந்த காலகட்டத்தில் மூன்று டிஏ உயர்வுகள் (ஜனவரி 2020, ஜூலை 2020 மற்றும் ஜனவரி 2021) நிறுத்தப்பட்டன. இந்த 18 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என ஊழியர்கள் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டால், ஊழியர்களுக்கு பெரும் தொகை நிலுவைத் தொகையாக கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், இது தொடர்பாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
8th Pay commission: 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்படுமா?
பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கபடுகின்றன. 2016 ஆம் ஆண்டு 7வது ஊதியக்குழு அமலுக்கு வந்தது. அந்த வகையில் 8வது ஊதியக்குழு 2026 -இல் அமலுக்கு வர வேண்டும். 8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என ஊழியர்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், அரசு தரப்பிலிருந்து இது பற்றி இன்னும் எந்த வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
8வது சம்பள கமிஷன் அமலுக்கு வந்தால் என்ன மாற்றங்கள் ஏற்படும்?
- சம்பள கட்டமைப்பில் விரிவான திருத்தம் ஏற்படலாம்.
- ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் மாற்றம் ஏற்படலாம்.
- குறைந்தபட்ச ஊதிய உயர்வு
- டிஏ கணக்கீடு சூத்திரத்தில் மாற்றங்கள்
மேலும் படிக்க | Budget 2025: ரயில் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம் வரலாம்.. விலை கூடுமா, குறையுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ