ஆதார் போல் இனி APAAR கார்டு... மாணவர்களுக்கு இது முக்கியம் - நன்மைகள் என்னென்ன?

APAAR ID Card: மாணவர்களுக்கு என தனித்துவமான அடையாள அட்டையான APAAR ஐடி கார்டை பெறுவதற்கு எப்படி விண்ணப்பிப்பது, அதன் நன்மைகள் என்ன ஆகியவற்றை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 27, 2024, 05:58 PM IST
  • மத்திய அரசு இந்த முன்னெடுப்பை தொடங்கியுள்ளது.
  • தற்போது சில மாநிலங்களில் மட்டுமே இது உள்ளது.
  • வருங்காலங்களில் மற்ற மாநிலங்களிலும் இது கொண்டுவரப்படும்.
ஆதார் போல் இனி APAAR கார்டு... மாணவர்களுக்கு இது முக்கியம் - நன்மைகள் என்னென்ன? title=

APAAR ID Card Latest Updates: அரசு வழங்கும் நலத் திட்டங்கள் மூலம் பயன் பெறுவது, வங்கிகளில் கணக்கு தொடங்குவது முதல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது வரை என பல்வேறு விஷயங்களுக்கு அரசு ஆவணங்கள் அடிப்படை தேவையாகும். ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு உள்ளிட்ட அரசு ஆவணங்கள் பல்வேறு விஷயங்களில் உங்களின் அடையாள சான்றாக செயல்படும்.

அப்படியிருக்க, தற்போது சில மாநில அரசுகள் மாணவர்களுக்கு APAAR ஐடி கார்டை வழங்க தொடங்கியுள்ளன. அதாவது மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் மாணவர்களுக்கு இந்த APAAR ஐடி கார்டுகளை பள்ளிகள் வழங்கி வருகின்றன. பெற்றோர் ஒப்புதலுடன், மாணவர்களின் ஆதார் அட்டை மற்றும் பிற அரசு அடையாள சான்றுகளை இந்த APAAR ஐடி கார்டு உடன் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

APAAR கார்டு என்றால் என்ன?

2020ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இதனை மத்திய அரசும், கல்வி அமைச்சகமும் முன்னெடுத்து உள்ளன. One Nation, One Student ID Card முன்னெடுப்பின்படி இந்த APAAR கார்டு வழங்கப்படுகிறதது. இது மாணவர்கள் தங்களின் முழுமையான கல்வி பயணத்தை ஒழுங்கமைத்து, டிஜிட்டல் மயமாக்குவதற்கு உதவும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் திடீர் இடமாற்றத்தை இந்த கார்டு எளிதாக்கும் என்றும் அவர்களின் முழு கல்வி சார்ந்த பதிவையும் ஒரே இடத்தில் பாதுகாப்பாக வைக்கவும் உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | உங்கள் பாஸ் உடன் நல்ல ரிலேஷன்ஷிப்பில் இருக்க-‘இந்த’ 7 விஷயங்களை செஞ்சா போதும்!

தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவு (Automated Permanent Academic Account Registry) எனப்படும் இந்த APAAR ஐடி என்பது மாணவர்களுக்கு என ஒரு தனித்துவமான மற்றும் டிஜிட்டல் அடையாள அட்டை ஆகும். இது மாணவர்களின் கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் சேமித்தும், அவற்றை எளிதாக அணுகவும் உதவுகிறது. இந்த ஐடி ஆரம்பநிலை முதல் உயர்கல்வி வரையிலான மாணவர்களுக்கானது என கூறப்படுகிறது.

APAAR கார்டின் நன்மைகள்

இந்த APAAR ஐடி கார்டில் மாணவரின் கல்விப் பட்டங்கள், ரிசல்ட்கள், மாணவர்கள் பயன்பெறும் உதவித்தொகை திட்டங்களின் பெயர், அவர்களது முகவரி, அவர்களின் இரத்தப்பிரிவு, இணை பாடத்திட்டம் மற்றும் விளையாட்டு சாதனைகள் போன்ற தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் அடங்கியிருக்கும்.

ஒரு பள்ளி அல்லது கல்லூரியில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறுகிறீர்கள் என்றால் இது பயனளிக்கும். அதாவது ஒரு அடிக்கடி வசிப்பிடத்தை மாற்றுபவர்களுக்கு இது பயனளிக்கும். இடைநிற்றல் மாணவர்களை பிரதான கல்விக்கு கொண்டு வர உதவுங்கள் மாணவர்களின் சுகாதாரப் பதிவுகள், ரிப்போர்ட் கார்டுகள் மற்றும் பிற கல்வித் தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இதன்மூலம் கிடைக்கும்.  மாணவர்கள் நேரடியாக அரசு திட்டங்களின் பலன்களைப் பெற முடியும். அனைத்து கல்வி சாதனைகள், உதவித்தொகைகள் மற்றும் மாணவர்களின் விருதுகள் பாதுகாப்பான டிஜிட்டல் வடிவத்தில் கிடைக்கும். அனைத்து இந்திய பல்கலைக்கழகங்களிலும் செல்லுபடியாகும் கடன் அமைப்பு உருவாகும்.

மாணவர்கள் APAAR கார்டு பெற பெற்றோரின் ஒப்புதல் தேவை ஆகும். பள்ளிகள் இந்தப் படிவத்தை வழங்கும். பெற்றோர்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இந்த ஒப்புதல் படிவத்தை தரவிறக்க APAAR-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதில், Resources பிரிவில் Parental Consent Form என்ற அந்த ஒப்புதல் படிவம் ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யவும். தொடர்ந்து, அதனை பூர்த்தி செய்து பள்ளியில் சமர்பிக்கவும்.

APAAR கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஆதார் & டிஜிலாக்கர் கணக்கை உருவாக்க வேண்டும். அதன்பின் உங்களிடம் ஆதார் அட்டை வைத்திருப்பது கட்டாயமாகும். டிஜிலாக்கர் கணக்கை உருவாக்கி ஆன்லைனில் இந்த APAAR கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அகாடமிக் பேங்க் ஆஃப் கிரெடிட்ஸ் (ABC வங்கி) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

"My Account" பிரிவில் "Student" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் ஆதார் மற்றும் கல்வி விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். அதனை முடித்த உடன் படிவத்தைச் சமர்ப்பிக்கவும். படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு APAAR அடையாள அட்டை உருவாக்கப்படும். அதன்பின், ABC வங்கி இணையதளத்தில் உள்நுழைந்து, டாஷ்போர்டில் உள்ள "APAAR Card Download" ஆப்ஷனை கிளிக் செய்யவும். கார்டு திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கமும் செய்யலாம், பிரிண்டும் செய்யலாம். தற்போது இது டெல்லி மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில்மட்டுமே  முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டுவரப்படும்.

மேலும் படிக்க | ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இலவச சிகிச்சை... தகுதி, விண்ணப்பிக்கும் முறை விபரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News