உருக்கமான உறைக்கு பின்னர் எடியூரப்பா ராஜினாமா செய்தார்!

உருக்கமான உறைக்கு பின்னர் எனது பதவியை ராஜினாமா செய்கின்றேன் என கூறி தனது பதவியினை ராஜினாமா செய்தார் எடியூரப்பா!

Last Updated : May 19, 2018, 04:53 PM IST
உருக்கமான உறைக்கு பின்னர் எடியூரப்பா ராஜினாமா செய்தார்! title=

16:28 19-05-2018

ராஜினாமா கடிதத்தினை ஆளுநர் வாஜூபாய் வாலாவிடம் வழங்கினார் எடியூரப்பா!


16:13 19-05-2018

நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருப்பதையொட்டி முதல்வர் எடியூரப்பா உருக்கமான உறையினை நிகழ்த்தி வருகிறார்... அவரது உறையில் குறிப்பிட்டுள்ளதாவது...

  • கர்நாட்டக மக்கள் எங்களுக்கு 104 இடங்களை வழங்கியுள்ளனர். 104 இடங்களுக்கு பதிலாக 113 இடங்களை மக்கள் கொடுத்திருந்தால் கர்நாட்டகா சொர்கமாக மாறியிருக்கும்.
  • மாநிலங்களவை தேர்தலில் நாங்கள் 28-க்கு 28 பெற்றோம்.
  • நான் வாழ்வது மக்களுக்காக, எனது பதவியை இழப்பது மூலம் என் மக்களை இழ்ந்துவிடமாட்டேன்.
  • எனவே எனது பதவியை ராஜினாமா செய்கின்றேன் என கூறி தனது பதவியினை ராஜினாமா செய்தார் எடியூரப்பா!

16:05 19-05-2018
மக்களின் தீர்ப்புக்கு எதிராக காங்கிரசும், மஜதவும் ஒன்று சேர்ந்துள்ளன. உயிர் இருக்கும் வரை கர்நாடக மாநில மக்களுக்காக நான் போராடுவேன் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்!


16:00 19-05-2018
காணாமல் போனதாக கூறப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிரதாப் கவுடா, அனந்த குமார் ஆகியோர் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர்! 


15:48 19-05-2018
கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, பாஜகவை சேர்ந்த ஷோபா, அனந்த குமார் ஆகியோர் ஒரே வரிசையில் அமர்ந்துள்ளனர்.


15:43 19-05-2018

கர்நாடக சட்டப்பேரவையில் பதவியேற்காமல் இருந்த மீதமுள்ள எம்எல்ஏக்கள் பதவியேற்று வருகின்றனர்.


15:06 19-05-2018
காணாமல் போனதாக கூறப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதாப் கவுடா போலீஸ் பாதுகாப்புடன் கர்நாடக பேரவைக்கு அழைத்து வரப்பட்டார்; அவருக்கு கர்நாடக பேரவையில் உணவு வழங்கப்பட்டது.


14:56 19-05-2018
இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், உறுதியாக பெரும்பான்மை கிடைக்காது என தெரிந்தால், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னதாகவே முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


14:46 19-05-2018
கர்நாடக சட்டப்பேரவையில் இதுவரை 207 பேர் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றுள்ளனர்!


13:03 19-05-2018
எம்.எல்.ஏவாக பதவியேற்க பாஜகவின் சோமசேகர் ரெட்டி கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்னும் வரவில்லை.


12:33 19-05-2018
நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது சரியானது; இது மேலும் எங்களுக்கு நம்பிக்கை தருகிறது. காங்.,- மஜத-வுக்கே வெற்றி என்பதில் சந்தேகமில்லை என்று அபிஷேக் மனு சிங்வி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 


12:17 19-05-2018

கர்நாடக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் எம்.எல். ஏக்கள் அனந்த் சிங், பிரதாப் கவுடா பதவியேற்க பேரவைக்கு வரவில்லை. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


12:05 19-05-2018

கர்நாடக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏவாக பதவியேற்ற ஸ்ரீராமலு, எடியூரப்பா ஆகிய இருவரும் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர். அவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.


11:52 19-05-2018
கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக எடியூரப்பா, சித்தராமையா பதவியேற்றுள்ளனர்!


11:49 19-05-2018

பெரும் பரபரப்புக்கு மத்தியில் கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்கின்றனர். பதவியேற்புக்கு பின்னர் மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.


11:36 19-05-2018
கர்நாடக தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட போபையாவை நீக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம் கர்நாடக சட்டப்பேரவையில் மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை போபையாதான் நடத்துவார் என்றும் உறுதி தெரிவித்துள்ளது.

 


11:26 19-05-2018
கே.ஜி.போபையாவை தற்காலிக சபநாயகராக இருக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது!


உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக சட்டமன்றத்தில் இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையா நேற்று நியமனம் செய்யப்பட்டார். விராஜ்பேட்டையில் இருந்து பாரதிய ஜனதா சார்பில் சட்டப்பேரவைக்கு போபையாவை தற்காலிக சபாநாயகராக நியமித்து கவர்னர் உத்தரவிட்டார். இதனை அடுத்து போபையா தற்காலிக சபாநாயகராக நேற்று  பதவியேற்றுக் கொண்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர். 

 


11:39 19-05-2018

அனைத்து ஊடகங்களும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்து கொள்ளலாம் என்றும், வாக்கெடுப்பை தவிர வேறு எந்த அலுவலும் சட்டப்பேரவையில் நடக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


11:15 19-05-2018
சட்டமன்ற நிகழ்வுகளை 11 மணி முதல் நேரலையில் ஒளிபரப்ப செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடி ஒளிபரப்பு செய்வதே சரியான தீர்வாக இருக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!


எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இதற்காக, ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ.,க்கள் பெங்களூரு அழைத்து வரப்பட்டுள்ளனர். நம்பிக்கை ஓட்டுடெடுப்பு நடத்தப்படுவதற்கு முன் காலையில் எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்க உள்ளனர். 

இதற்காக கர்நாடக சட்டசபை காலை 11 மணிக்கு கூட உள்ளது. முதலில் ஆளும்கட்சி எம்எல்ஏ.,க்களும், பின்னர் மற்ற கட்சிகளின் எம்எல்ஏ.,க்களும் பதவியேற்க உள்ளனர். சபாநாயகருக்கு எதிரான வழக்கு விசாரணை, நம்பிக்கை ஓட்டெடுப்பு, எம்எல்ஏ.,க்கள் பதவியேற்பு என அடுத்தடுத்த நிகழ்வுகள் காரணமாக கர்நாடக சட்டசபை அமைந்துள்ள பகுதியை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


எடியூரப்பா முதல்வராக பதவியேற்புக்கு எதிரான வழக்கில் கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 4 மணிக்குள் பெரும்பான்மையை எடியூரப்பா நிரூபிக்க வேண்டும்.

222 இடங்களுக்கு நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில், அதிகபட்சமாக பாஜகவுக்கு 104 இடங்கலும், காங்கிரசுக்கு 78 இடங்களும், மஜதவுக்கு 37 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இதனை ஏற்க மறுத்த கர்நாடகா ஆளுநர், அதிக இடங்களை கைப்பற்றிய பாஜக-வை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

இதனை எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டது. இந்த வழக்கு நேற்று விசாரனைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். எம்எல்ஏக்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, கர்நாடக சட்டப்பேரவையில் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. 

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வது இது முதல்முறையல்ல. 2007ம் ஆண்டு எடியூரப்பா முதல்வராக இருந்த போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்ததால் ஏழே நாட்களில் ஆட்சியை பறிகொடுத்தார் எடியூரப்பா. அதையடுத்து, 2008, 2011, 2010-ஆண்டு முதல் தான் சந்தித்த 4 வாக்கெடுப்புகளில் 3 முறை அவர் வென்றார். ஒன்றில் மட்டும் தோல்வியுற்றார். இப்போது இன்று மாலை 4 மணிக்கு 5 ஆவது முறையாக எடியூரப்பா பேரவையில் பலப்பரீட்சையை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending News