தமிழ்த் திரைப்பட இயக்குநரான விக்னேஷ் சிவன், எராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். முன்னதாக, இவர் இயக்கிய 'நானும் ரவுடிதான்' படத்தின் மூலம் இவருக்கும் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரவி வருகின்றது.
இதையடுத்து, நயன்தாராவின் நடிப்பில் உருவான கல்யாண வயசு பாடல் வீடியோ பார்த்த விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்..! ''நேக்கு கல்யாண வயசு வந்திடுத்து டி'' என பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனைப்படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்த வெற்றி தொடர்பாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில்....!
தோனி, என்றாவது ஒருநாள் இந்தியாவின் பிரதமரானால் எப்படியிருக்கும். மிகச்சிறந்த தலைவர், மிகச்சிறந்த மனிதர். எத்தனை வருடங்கள் ஆனாலும், தன் மீது ஒரு புகார் கூட இல்லாத அப்பழுக்கற்றவர்.
அவர் இன்னும் மிகப்பெரிய அளவில் வரவேண்டும். எதிர்காலத்தில் மிகச்சிறந்த விஷயங்களைச் செய்ய வேண்டும். விளையாட்டில் மட்டுமல்ல, நாட்டுக்காகவும் என சிலாகித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவனின் இந்த பதிவானது நெட்டிசன்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
WhAt if #Dhoni becomes the prime minister of India one day!
Whatttaa Leader!
What a great guy!Sportsmen often vanish after their 40s or so.. but shouldn’t be the case with this gem!
He should grow bigger, do greater things in future! Not jus wit sports! But for the Nation! pic.twitter.com/tUEpTT4TNB
— Vignesh ShivN (@VigneshShivN) May 27, 2018