Total Curfew in Tamil Nadu: இன்று முதல் லாக்டவுன், எவை இயங்கும்? கட்டுப்பாடுகள் என்ன?

மாநிலத்தில் இன்று முதல் வரும் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இன்று அதிகாலை நான்கு மணிக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 10, 2021, 10:59 AM IST
  • இன்று முதல் வரும் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு
  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • காய்கறி, இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்கும்
Total Curfew in Tamil Nadu: இன்று முதல் லாக்டவுன், எவை இயங்கும்? கட்டுப்பாடுகள் என்ன? title=

சென்னை: கொரோனா இரண்டாம் அலை உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30,000 நெருங்கிவருவதால், மாநிலத்தில் இன்று முதல் வரும் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இன்று அதிகாலை நான்கு மணிக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 28,897 பேருக்கு கொரோனா (Coronavirus) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் முழு ஊரடங்கு (Lockdown) வணிக வளாகங்களில் இயங்கும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் இயங்காது. தனியாகச் செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்கும். இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை அமலுக்கு வந்தது.

Also Read | மே 10 முதல் LIC ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு; 5 நாட்கள் வேலை 
 
அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி. தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்படும். விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்கள் இயங்கக்கூடாது.  

வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணிகளைத் தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும். ரயில் மற்றும் விமான நிலையங்களுக்குப் பயணிகள் சென்று வர, பயணச் சீட்டுடன் அனுமதி உண்டு.  

தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் ஆகியவை இயங்காது. திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கும், மருத்துவமனை செல்வதற்கும் உரிய ஆவணங்களுடன் பயணித்தால் அனுமதி உண்டு.  

Also Read | Puducherry முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி 

முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் (Tasmac) கடைகளும் இயங்காது. உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்குத் தடை அமலுக்கு வந்தது. 

மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது. இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.

அத்தியாவசிய துறைகளான, தலைமைச் செயலகம், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, காவல் துறை, ஊர்காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சித் துறைகள், வனத்துறை அலுவலகங்கள், கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலகங்கள் மட்டுமே இயங்கும். மாநில அரசின் இதர அலுவலகங்கள் எதுவும் இயங்காது. இந்தக் கட்டுப்பாடுகள் மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும்.

Also Read | தனது முதல் டிவிட்டர் பதிவில் தமிழக முதலமைச்சரை வாழ்த்திய இயக்குநர் பாலா! 

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், கோடைக்கால முகாம்கள் ஆகியவை இயங்க அனுமதி கிடையாது. நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சி சங்கம் / குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை. உணவு விநியோகம், மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்யும் மின் வணிக நிறுவனங்கள் தவிர மற்ற மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு அனுமதி இல்லை.

தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. விதி விலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிரப் பிற தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. வீட்டிலிருந்தபடி பணியாற்றும் முறையை அவை பின்பற்றலாம் 

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. வழிபாட்டுத் தலங்களில் தினமும் நடைபெறும் பூஜைகள் / பிரார்த்தனைகள் / சடங்குகளை, ஊழியர்கள் நடத்திக் கொள்ளலாம். 

அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகள், பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அருங்காட்சியகங்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

ALSO READ | தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள்!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News