இந்தியா: கொரோனாவின் கோரத் தாண்டவத்தில் நாடே திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், மே மாதம் முதல் தேதியில் இருந்து,18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருத்தது அனைவருக்கும் சற்றே ஆறுதலை கொடுத்ததது.
ஆனால், இது வெறும் வாய்ப்பேச்சாகவே இருந்துவிடும், நிதர்சன தீர்வாகாது என்று செய்திகள் கவலைகளையும், அச்சத்தையும் அதிகரிக்கிறது.
"அனைவருக்கும் தடுப்பூசி" (Covid-19 Vaccine for all) என்ற திட்டத்தின் கீழ் மக்கள் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளும் நடைமுறையும் நேற்றே தொடங்கிவிட்டது.
ALSO READ | ஆக்ஸிஜன் உபகரணங்கள் இறக்குமதி மீதான வரிகள் நீக்கம்: மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா தடுப்பு மருந்து அறிமுகமான பிறகு முதலில் 60 வயதுக்கு அதிகமானவர்கள், பிறகு 45க்கு வயதை கடந்தவர்கள் என முன்னுரிமையின் அடிப்படையில் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் போடும் நடைமுறை தொடங்கிவிட்டது.
இதில், முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, போட வேண்டிய இரண்டாம் கட்ட தடுப்பு மருந்துகளே இன்னும் மாநிலங்களுக்கு முழுமையாக வந்து சேரவில்லை என்ற நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேவையான தடுப்பு மருந்துகளின் இருப்பு எங்கே இருக்கிறது என்ற கேள்விகள் எழுகின்றன.
பல மாநலங்களில் இரண்டாவது டோஸ் இன்னும் போடாமல் பொதுமக்கள் காத்திருக்கும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் போதுமான தடுப்பூசி ஒதுக்கீடு செய்யவில்லை என தனியார் மருத்துவமனைகள் குற்றம் சாட்டுகின்றன.
Also Read | Coronavirus: இந்தியாவுக்கு ரஷ்யாவின் அவசரகால மருத்துவ உதவிகள்
மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்காக CoWin மொபைல் ஆப் மற்றும் இணையதளம் மூலம் நேற்று முன்பதிவு தொடங்கியதுமே, ஒரேநேரத்தில் பல லட்சம் பேர் பதிவு செய்ய முயற்சித்ததால் CoWin சர்வர் முடங்கியது. முதல் நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள், கோவிட் தடுப்பு மருந்துகளை உரிய நேரத்தில் விநியோகம் செய்ய வேண்டும் என்பது தான் இந்தத் திட்டத்தின் ஆணிவேராகும்.. தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான தடுப்பூசி ஒதுக்கீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் எதுவும் இதுவரை தயார் செய்யப்படவில்லை என்பதும் கவலைகளை அதிகரிக்கின்றன.
தடுப்பூசி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு 60 சதவீதமும், மாநில அரசுகளுக்கு 30 சதவீதமும் தங்கள் தடுப்பு மருந்துகளை ஒதுக்கும். இதில் மாநில அரசுகளுக்கு கிடைக்கும் தடுப்பூசிகள், அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படும்.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய தடுப்பு மருந்துகளை விநியோகிப்பது மத்திய அரசா அல்லது மாநில அரசா என்பதும் தெரியவில்லை.
ALSO READ: தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினால் கூட தவறில்லை: நீதிமன்றம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR