புதுடில்லி: இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டிருக்கின்றது. தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துண்டே உள்ளது.
புதன்கிழமை (ஏப்ரல் 28, 2021) வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, நாட்டில் கோவிட் -19 காரணமாக ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 3,000-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,60,960 பேர் புதிதாக கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,79,97,267 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ: இன்று முதல் 18+ அனைவரும் கோவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யலாம்
நாட்டின் மொத்த COVID-19 கேஸ்லோட் இப்போது 1.79 கோடியாக (1,79,97,267) அதிகரித்துள்ளது. அவற்றில் 29.78 லட்சம் (29,78,709) பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2.01 லட்சம் (2,01,187) பேர் இறந்துள்ளனர்.
கடந்த ஏழு நாட்களாக, COVID-19 இன் இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் தினசரி 3 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தரவுகளின்படி, மகாராஷ்டிராவில் இந்தியாவில் அதிகமானோர் COVID தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு செவ்வாயன்று 895 பேர் கொரோனா தொற்று காரணமாக இறந்தனர், 66,000 க்கும் மேற்பட்டோர் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவுக்குப் பிறகு, கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகியவை அதிக அளவில் தொற்றுநோய்களைக் கொண்டுள்ள மாநிலங்களாக உள்ளன.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள், கோவிட் -19 தடுப்பூசி (Vaccination) டோசைப் பெறுவதற்கான பதிவு புதன்கிழமை (ஏப்ரல் 28, 2021) தொடங்கி விட்டது. மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் COVID-19 தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள முடியும்.
இந்தியாவில் தொற்றுநோயின் இரண்டாவது அலை தீவிரமாக உள்ள நிலையில், அதிகபட்ச எண்ணிக்கையிலான இந்தியர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ALSO READ: ஆக்ஸிஜன் ஆலையை எடுத்து நடத்துங்கள், உயிர்கள் முக்கியம்: டெல்லி HC அரசுக்கு அதிரடி உத்தரவு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR