Budget 2021: கேபேசி இனி கையைக் கடிக்குமா? Costly ஆகிறதா Mobile Phone?

உள்நாட்டு மின்னணு உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சியில், சார்ஜர்கள் மற்றும் மொபைல்களின் பாகங்கள் மீதான விலக்குகளை நீக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2021, 03:37 PM IST
  • பட்ஜெட் 2021 நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
  • சார்ஜர்கள் மற்றும் மொபைல்களின் பாகங்கள் மீதான விலக்குகளை நீக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • உள்நாட்டு மின்னணு உற்பத்தியை ஊக்குவிக்க முயற்சி.
Budget 2021: கேபேசி இனி கையைக் கடிக்குமா? Costly ஆகிறதா Mobile Phone? title=

Union Budget 2021: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை 2021 ஐ நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். உள்நாட்டு மின்னணு உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சியில், சார்ஜர்கள் மற்றும் மொபைல்களின் பாகங்கள் மீதான விலக்குகளை நீக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கூற்றுப்படி, சுங்க வரிகள் விதிக்கப்படாமல் இருந்த மொபைல் போன்களின் சில பகுதிகளுக்கு இனி 2.5 சதவீத மிதமான சுங்க வரி விதிக்கப்படும்.  

"ஸ்மார்ட்போன்களின் (Smartphone) உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சார்ஜர்கள் மற்றும் மொபைல் போன்களின் சில பகுதிகளுக்கான விலக்குகள் திரும்பப் பெறப்படுகின்றன. உள்நாட்டு மின்னணு உற்பத்தி வேகமாக வளர்ந்துள்ளது. அதிக உள்நாட்டு மதிப்பு கூட்டலுக்காக, சார்ஜர்கள் மற்றும் மொபைல்களின் துணைப் பகுதிகளில் சில விலக்குகளை நாங்கள் திரும்பப் பெறுகிறோம். மேலும் சுங்க வரிகள் விதிக்கப்படாமல் இருந்த மொபைல் போன்களின் சில பகுதிகளுக்கு இனி 2.5 சதவீத மிதமான சுங்க வரி விதிக்கப்படும்” என்று மத்திய பட்ஜெட் 2021 ஐ (Union Budget 2021) வழங்கியபோது நிதி அமைச்சர் தெரிவித்தார்.

ALSO READ: Budget 2021: சென்னை வாசிகளுக்கு நற்செய்தி: Chennai Metro-வுக்கு மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு

இதற்கிடையில், 2021/22 ஆம் ஆண்டில் சுகாதார பராமரிப்புக்காக அரசாங்கம் 2.2 டிரில்லியன் ரூபாய் (30.20 பில்லியன் டாலர்) ஒதுக்கும் என்று மத்திய பட்ஜெட்டின் போது நிர்மலா சீதாராமன் கூறினார். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி கீழ் நோக்கி சென்றுள்ள பொருளாதாரத்தை புதுப்பிக்க இது உதவும்.

அடுத்த ஆறு ஆண்டுகளில் சுமார் 641 பில்லியன் இந்திய ரூபாய் (8.80 பில்லியன் டாலர்) செலவினத்துடன் புதிய கூட்டாட்சி சுகாதார திட்டத்தை அரசாங்கம் தொடங்கும் என்று அவர் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் (Coronavirus) மிக அதிக அளவில் பாதிக்கப்பட்ட மக்கள் இந்தியாவில்தான் உள்ளனர்.  தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாம் 1 சதவிகிதம் மட்டுமே சுகாதாரத் துறையில் செலவிடுகிறோம். மிகப் பெரிய பொருளாதாரமாக திகழும் ஒரு நாட்டிற்கு இது மிகக் குறைவாகும்.

இதைக் கருத்தில் கொண்டும், தற்போதைய சூழல்களை கருத்திக் கொண்டும், நிதி அமைச்சர் சுகாதாரத் துறையில் பல முக்கிய மற்றும் அத்தியாவசிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ALSO READ: Budget 2021: நிதி அமைச்சரின் பெரிய அறிவிப்பை எதிர்பார்த்திருக்கும் Middle Class

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News