Budget 2021: 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி விலக்கு..!

75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2021, 02:03 PM IST
Budget 2021: 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி விலக்கு..! title=

75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

மக்களவையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான (Union Budget 2021) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் ஆகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை மந்திரி அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை குழுவினர் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அவரிடம் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக எடுத்துரைத்தனர். அதன்பின்னர் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் (Nirmala sitharaman), இணை மந்திரி அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் பாராளுமன்றத்திற்கு புறப்பட்டனர். முதலில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தியாவில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் (Digital Budget) செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்படுகிறது. 

இதுவரை இல்லாத அளவாக 6.48 கோடி பேர் வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். வட்டி வருமானத்தை நம்பியுள்ள மூத்த குடிமக்களுக்கு வரி தாக்கலில் இரு்து விலக்கு அளிக்கப்படுகிறது. 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி (Tax) கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை. ஓய்வூதியம், வட்டி ஆகியவற்றை மட்டும் நம்பியிருந்தால் கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம். வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை. 

ALSO READ | நடப்பாண்டில் ரூ.16.5 லட்சம் கோடிக்கு விவசாய கடன் தர இலக்கு நிர்ணயம்!

ரூ .3,00,001 முதல் 5,00,000 வரை - 5 சதவீதம்

ரூ .5,00,001 முதல் 10,00,000 வரை - வருமானத்தில் ₹ 10,000 + 20 சதவீதம் ரூ .5,00,000 ஐ தாண்டியது

ரூ .10,00,000 க்கு மேல் - ரூ .10,00,000 ஐ தாண்டிய மொத்த வருமானத்தில் ரூ .1,10,000 + 30 சதவீதம்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியா திரும்பும் போது, இரட்டை வரி விதிப்பு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான வருமான வரி சச்சரவுகளை தீர்த்துவைக்க புதிய குழு அமைக்கப்படும்.

வீட்டுக்கடனில் வட்டிக்கான வருமான வரி சலுகை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுகிறது. ரூ.1.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்ட வீட்டுக்கடன் வட்டி சலுகை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுகிறது. குறைந்த விலை வீடுகளை வாங்குபவர்களுக்கான வரிச்சலுகை 2022 வரை நீட்டிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News