பட்ஜெட் 2021-22: நாட்டின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். நாட்டின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கியுள்ளார். முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவிப்பதற்காக, இந்த முறை டிஜிட்டல் வடிவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
எந்தத் துறைக்கு எந்த திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பதைக் காண்பிப்போம். புகைப்படங்கள் மூலம் அறிந்துக்கொள்ளுங்கள்!!
நாட்டில் விரைவில் 17 புதிய மருத்துவமனைகள் அமைக்கப்படும் -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெரிய அறிவிப்பு - கொரோனா தடுப்பூசிக்கு ரூ. 35000 கோடி ஒதுக்கீடு
பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டுவர மத்திய அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும், இந்த பட்ஜெட் புதிய தசாப்தத்திற்கான பட்ஜெட்டாக இருக்கும்: நிதி அமைச்சர்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெரிய அறிவிப்பு - ஸ்வஸ்த் பாரத் திட்டத்தின் கீழ் அடுத்த 6 ஆண்டுகளுக்கு ரூ.64,180 கோடி ஒதுக்கீடு.
நாடு முழுவதும் பஸ் சேவைக்கு ரூ. 18,000 கோடி செலவிடப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
2022 மார்ச் மாதத்திற்குள் 8500 கி.மீ நெடுஞ்சாலை அமைக்கப்படும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
2023 க்குள் 100 சதவீதம் ரயில்கள் மின்சாரத்தில் இயங்கும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ரயில்வே பட்ஜெட்டிற்கு ரூ. 1.1 லட்சம் கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
காப்பீடு துறையில் 74% அந்நிய நேரடி முதலீடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
2020 - 2021 ஆண்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ 75,000 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்