TVK Conference: தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெறும் திடலில் வெயிலின் தாக்கம் காரணமாக தொண்டர்கள் மயங்கி விழுந்து கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அமர இருக்கையும் இன்றி மாநாட்டுத் திடல் கடுமையாக திணறி வருகிறது.
Vijay vs Vijayakanth: தேமுதிகவின் முதல் மாநாடு பெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது தவெக மாநாடு மீதும் கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், தற்போதைய சூழலில் விஜய் மற்றும் விஜயகாந்த் ஆகியோர் குறித்த ஒப்பீட்டை இங்கு காணலாம்.
தவெக முதல் மாநில மாநாடு விழுப்புரம் வி.சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. அங்கு 20 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஏற்பாடுகள் இன்று நிறைவு பெற்றது.
Tamilaga Vetri Kazhagam: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை (அக். 27) நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியிருக்கிறார்.
Free Medical Treatment | முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்ட எண்ணுடன் ஆதார் எண் இணைத்தால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை கிடைக்கும்.
Youtuber Irfan Controversy: பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூ-ட்யூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரத்தில் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை யார் வேண்டுமானாலும் வெட்டலாமா? அது பாதுகாப்பானதா?... குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்பான் வெட்டிய விவகாரம்,மகப்பேறு மருத்துவர் திவ்யா ஷரோனா சொல்லும் தகவல்
Youtuber இர்பான் செய்த ஒரு செயலால் அவர் மட்டுமல்லாமல் அவரது மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் என பலருக்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை என்ன? இஃபானுக்கு என்னென்ன சிக்கல் பார்க்கலாம். இந்த தொகுப்பில்
Madurai Crime News: மதுரையில் கணவருடன் தீபாவளி ஷாப்பிங் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பெண்ணிடம் வீட்டு வாசலிலே வைத்து அதிவேகமாக பைக்கில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர். இதன் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில ஆண்டுகளாக இயற்கை இடற்பாடுகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணத்தை வழங்காமல் பாரபட்சம் காட்டி வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் பேட்டியளித்த அவர், பாஜக அல்லாத 10 மாநிலங்களில் ஆளுநர் பதவியை பயன்படுத்தி மத்திய அரசு போட்டி சர்க்கார் நடத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
அதிமுகவுடன் யாரும் கூட்டணி சேரத் தயாராக இல்லை என்றும், அதனுடைய வெளிப்பாடுதான் எடப்பாடி பழனிசாமியின் விரக்திப் புலம்பல் என்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பேரன் என்பதைத் தாண்டி துணை முதலமைச்சர் ஆனதற்கு உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆயிரக் கணக்கில் மாத சம்பளம் பெற்ற, ஐ.டி. ஊழியர், இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட பற்றால், தனது வேலையை உதறிவிட்டு, தற்போது வேளாண் உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறார். பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி நல்ல லாபமும் பெற்று வருகிறார்.
உதய நிதி ஸ்டாலின் துணை முதல்வர் மட்டுமல்ல, முதல்வரானலும் எங்களுக்கு கவலை இல்லை, அதைப்பற்றி வருத்தப்பட வேண்டியவர்கள் திமுகவினர் மற்றும் திமுக மூத்த தலைவர்கள் தான் - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.