Madurai Crime Latest News: மதுரை பந்தடி பகுதியை சேர்ந்த துவாரகநாத் -மஞ்சுளா தம்பதி கடந்த ஞாயிற்றுக்கிழமையான (அக். 20) விடுமுறை தினத்தன்று மதுரை மாட்டுத்தாவணி மற்றும் கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்கு இரவு கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
இந்த நிலையில், கணவர் வாகனத்தை நிறுத்தி மனைவி வாகனத்தில் இருந்து கீழே இறங்கும் நேரத்தில், அவரை பின்தொடர்ந்த R15 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேரில் ஒருவர் மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை பறிக்க முற்பட்டனர்.
மூன்றே முக்கால் பவுன் செயின்
மஞ்சுளா அவரது கழுத்தில் மூன்றே முக்கால் பவுன் தங்க செயினை அணிந்திருந்தார். அந்த நபர் செயினை பறிக்க முயன்றதில் மஞ்சுளா செயினை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதனால் இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் மஞ்சுளவை தர தர என சாலையில் இழுத்தவரே வாகனத்தில் வேகமாக இயக்கி சென்றனர். இதில் செயின் இரண்டாக உடைந்து ஒரு பகுதி கொள்ளையர்கள் கையிலும், மற்றொரு பாகம் மஞ்சுளா கழுத்திலும் இருந்தது. தற்போது இச்சம்பவத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | மாமல்லபுரத்தில் காவலாளியை தாக்கிய பெண்கள்! ஷாக்கிங் வீடியோ
கணவனின் கண் முன்னே...
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது கணவருடன் மாட்டுத்தாவணி கீழவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஷாப்பிங் செய்துவிட்டு இளைப்பாற வீடு திரும்பிய நிலையில், அவர்களின் வீட்டு வாசலிலேயே மர்ம கும்பல் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது கணவனின் கண் முன்பாகவே மனைவியின் தங்களை நகையை பறித்து சென்றனர், பைக்கில் இருந்த கணவர் தடுமாறி கீழே விழுந்தார். அவர் எழுந்துவிடுவதற்கு அவரது மனைவி தரதரவென சாலையில் இழுத்து செல்லப்பட்டார்.
மதுரை போலீசார் தீவிர விசாரணை
மேலும், இச்சம்பவம் தொடர்பாக தெற்கு வாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விலை உயர்ந்த R15 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி இருசக்கர வாகனத்தின் அடையாளங்களை கண்டறிந்து செயின் பறிப்பில் ஈடுபட்டது யார் என்பது குறித்தும் தற்போது தெற்குவாசல் போலீசார் விசாரணை தீவிர படுத்தியுள்ளனர்.
இதேபோல மற்றொரு சிசிடிவி காட்சியில் சிறார்கள் இருவர் வீடு புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் சிசிடிவி கட்சியும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து பந்தடி தெருவில் இது போன்ற குற்ற செயல்கள் நடப்பதாக பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் காவல்துறையினர் அவ்வப்போது ரோந்து வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்களில் கல்லூரி இளைஞர்கள், வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்கள், போதை பொருள்களை வாங்குவதற்கு பணம் திரட்ட இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதுவும் சென்னையில் புறநகர் பகுதிகளில் இதுபோன்ற விலை உயர்ந்த பைக்குகளில் வந்து பணம் பறிப்பு, செல்போன் பறிப்பு, நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்துவந்ததையும் நினைவுக்கூர்ந்தனர்.
மேலும் படிக்க | காவலர்களை ஆபாசமாக வசைபாடிய வைரல் 'ஜோடி' - வலைவீசி பிடித்த மைலாப்பூர் போலீஸ்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ