எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு நல திட்டங்கள் உதவி வழங்கும் விழா அதிமுக சார்பில் ஆர் எஸ் ராஜேஷ் தலைமையில் கொருக்குப்பேட்டையில் நடைபெற்றது. இதில் நடிகை கௌதமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையில் யார் அந்த சார் என்பதை எதிர்க்கட்சிகள் சொல்ல முடியுமா? என காங்கிரஸ் கட்சியின் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமர் மோடி சந்திக்கும்போது சொல்லக்கூடிய திராணி தெம்பு தைரியம் ஏன் முதலமைச்சருக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கேள்வி.
பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து கடந்த ஆட்சியில் நாங்கள் போராட்டம் செய்த பொழுது அதிமுகவினர் என்ன நடவடிக்கை எடுத்தனர்? தொழில் நிர்வாக துறை அமைச்சர் தா மோ அன்பரசன் கேள்வி.
திமுகவை யார் பழித்து பேசினாலும் அவர்களுக்குள் குடும்பச் சண்டை வரும் எனவும், அடிதடி நடக்கும் எனவும் குடியாத்ததில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
மேலூர் டங்ஸ்டன் பிரச்சினையில் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் கபட நாடகத்தைத் தோலுரித்துக் காட்டியது இன்று நிரூபணம் ஆகியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Erode East Constituency Bypoll Updates: ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் பிப்ரவரியில் இடைத்தேர்தல் நடைபெறலாம் எனத் தகவல். எந்தெந்த கட்சிகள் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும், டிடிவி தினகரன் பாஜகவிடம் சரணடைந்துள்ளார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.