பாலிவுட் பிரபல தீபிகா படுகோனே, கிரக்கெட் வீரர்கள் டோனி, ரோகித் ஷர்மா, புமரா, ஹார்டிக் பாண்டியா ஆகியோர் நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 3 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி-20 போட்டி விளையாடி வருகின்றது.
நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
3-வது டெஸ்ட் போட்டி வரும் சனிக்கிழமை அன்று பல்லகல்லேவில் தொடங்க உள்ளது. 2வது டெஸ்ட்டில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா விதிமுறைகளை மீறியதற்காக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்து ஐசிசி நடவடிக்கை மேற்கொண்டது.
இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் இந்திய அணிக்கான வீரர்களை தரம் வாரியாக ஒப்பந்தம் செய்து வருகிறது.
2017-2018-ம் ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியல் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இன்று வெளியிடப்பட்டது. இதுதவிர கிரிக்கெட் வீரர்களின் ஆண்டு அடிப்படை சம்பளத்தையும் பிசிசிஐ இரு மடங்காக உயர்த்தியுள்ளது.
சர்வேதச டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சேதேஷ்வர் புஜாரா இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
ராஞ்சியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் புஜாரா 202 ரன்கள் குவித்தார்.
புஜாரா இரட்டை சதம் அடித்ததால் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி, ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
சர்வேதச டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஜடேஜா அற்புதமாகப் பந்துவீசி வருகிறார். சிறப்பாக பந்து வீசி அசத்திய ஜடேஜா அதிக விக்கெட்களை கைப்பற்றினார்.
இதை தொடர்ந்து டெஸ்ட் பவுலர்கள் பட்டியலில் 899 புள்ளிகளை பெற்று சர்வதேச டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 862 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அஷ்வின் - ஜடேஜா முதலிடம் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் அஷ்வின் முதலிடத்திலும் ஜடேஜா இரண்டாம் இடத்திலும் இருந்தார்கள். பெங்களூர் டெஸ்டுக்குப் பிறகு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஐசிசி தரவரிசைப்பட்டியலில் ஜடேஜாவும் அஷ்வினுடன் இணைந்து முதலிடம் பிடித்துள்ளனர்.
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியில் அஷ்வின் மற்றும் ஜடேஜா இடம்பிடித்துள்ளார்கள். இந்த சாதனையை எட்டிய வீரர் என்ற பெருமை அஷ்வின் மற்றும் ஜடேஜா பெறுவார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’ ஆன நிலையில் அடுத்த 3 டெஸ்டுகளில் முறையே 246 ரன், 8 விக்கெட், இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் ஆகிய வித்தியாசங்களில் இந்திய அணி இமாலய வெற்றியை பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 400 ரன்கள் சேர்த்தது.
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. விராட் கோலியும், ஜயந்த் யாதவும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். ஜயந்த் யாதவ் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். இருவரின் ஆட்டத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 631 ரன்கள் குவித்தது. விராட் கோலி 235 ரன்னும், ஜயந்த் யாதவ் 104 ரன்னும் குவித்தனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் டிரா ஆனது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. மொகாலியில் நடந்த 3-வது டெஸ்டிலும் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.