ஐசிசி டெஸ்ட் தரவரிசையில்: சேதேஷ்வர் புஜாரா 2-வது இடத்துக்கு உயர்வு

Last Updated : Mar 21, 2017, 04:16 PM IST
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில்: சேதேஷ்வர் புஜாரா 2-வது இடத்துக்கு உயர்வு title=

சர்வேதச டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சேதேஷ்வர் புஜாரா இரண்டாவது இடம் பிடித்துள்ளார். 

ராஞ்சியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் புஜாரா 202 ரன்கள் குவித்தார்.

புஜாரா இரட்டை சதம் அடித்ததால் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி, ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அதேபோல பேட்டிங்கில் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் 941 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 861 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் புஜாரா உள்ளார். விராட் கோலி 826 புள்ளிகளுடன் 4-ம் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்

டெஸ்ட் பவுலர்கள் பட்டியலில் 899 புள்ளிகளை பெற்று சர்வதேச டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 862 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் வங்கதேத்தின் ஷகிப் அல்ஹசன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அஸ்வின் 2-வது இடத்தில் உள்ளார். ஜடேஜாவுக்கு 3-ம் இடம் கிடைத்துள்ளது.

 

 

 

 

Trending News