பிசிசிஐ ஒப்பந்தம்: ‘ஏ’ கிரேடுக்கு முன்னேறிய ஜடேஜா, புஜாரா, முரளி விஜய்

Last Updated : Mar 22, 2017, 09:08 PM IST
பிசிசிஐ ஒப்பந்தம்: ‘ஏ’ கிரேடுக்கு முன்னேறிய ஜடேஜா, புஜாரா, முரளி விஜய்  title=

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் இந்திய அணிக்கான வீரர்களை தரம் வாரியாக ஒப்பந்தம் செய்து வருகிறது. 

2017-2018-ம் ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியல் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இன்று வெளியிடப்பட்டது. இதுதவிர கிரிக்கெட் வீரர்களின் ஆண்டு அடிப்படை சம்பளத்தையும் பிசிசிஐ இரு மடங்காக உயர்த்தியுள்ளது.

அதன்படி, ‘ஏ’  கிரேடில் உள்ளவர்களுக்கு ரூ.2 கோடியும், ‘பி’ கிரேடில் இடம் பெறுபவருக்கு ரூ.1 கோடியும், ‘சி’ கிரேடில் இடம் பெறுபவருக்கு ரூ.50 லட்சமும் ஆண்டு சம்பளம் வழங்கப்படும். இதேபோல் போட்டி சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சமாகவும், ஒரு நாள் போட்டிக்கு ரூ.6 லட்சமாகவும், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சமாகவும் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 

இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா, புஜாரா, முரளி விஜய் ஆகிய மூவரும் ‘ஏ’ கிரேடுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர். கிரேடு வாரியாக வீரர்களின் ஒப்பந்தப் பட்டியல் பின்வருமாறு:-

முதல் நிலை வீரர்கள்: விராட் கோலி, தோனி, அஸ்வின், முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா, சத்தீஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரகானே.

 

 

2-ம் நிலை வீரர்கள்: ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், புவனேஸ்வர் குமார், முகம்மது சமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், விருத்திமான் சகா, ஜாஸ்பிரிட் பும்ரா, யுவராஜ் சிங்

 

 

3-ம் நிலை வீரர்கள்: ஷிகர் தவான், அம்பாதி ராயுடு, அமித் மிஸ்ரா, மணிஷ் பாண்டே, அக்சர் பட்டேல், கருண் நாயர், ஹர்திக் பாண்ட்யா, ஆசிஷ் நெஹ்ரா, கேதார் ஜாதவ், யஷ்வேந்திர சாகல், பார்த்திவ் பட்டேல், ஜெயந்த் யாதவ், மன்தீப் சிங், தவால் குல்கர்னி, ஷர்துல் தாகூர், ரிஷப் பன்ட்.

 

 

Trending News