CSK ரசிகர்களுக்கா வந்துவிட்டது Come Back CSK இசைப்பாடல்!

இரண்டு ஆண்டு தடைக்கு பின்னர், மீண்டும் களம் காணும் CSK அணியினை வரவேற்கும் வகையில் Come Back CSK இசைப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது!

Last Updated : Feb 20, 2018, 06:28 PM IST
CSK  ரசிகர்களுக்கா வந்துவிட்டது Come Back CSK இசைப்பாடல்! title=

இரண்டு ஆண்டு தடைக்கு பின்னர், மீண்டும் களம் காணும் CSK அணியினை வரவேற்கும் வகையில் Come Back CSK இசைப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது!

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டு இடைகால தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த ஆண்டு நடைபெறவுள்ள IPL2018 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்குகிறது.

இதனை வரவேற்கும் வகையில், Come Back CSK என்னும் பெயரில் இசைப்பாடல் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பாடலினை சதீஷ் ராஜா இயக்கியுள்ளார். கார்த்திக் குரு இசையமைத்துள்ளார்.

வரும் ஏப்ரல் மாதம் IPL 2018 தொடர் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினை வரவேற்க்கு வகையிலுல், புதிய உத்வேகத்தினை அளிக்கும் வகையிலும் இப்பாடல் அமையப்பெற உள்ளது.

இந்நிலையில் இப்பாடலின் டீஸரினை, இக்குழுவினர் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த டீஸரினை கீழ்காணும் இணைப்பின் மூலம் கண்டு ரசியுங்கள்!

Trending News