ஐசிசி டெஸ்ட் பவுலர்கள்: ஜடேஜா முதலிடம், 2-வது இடத்தில் அஸ்வின்

Last Updated : Mar 21, 2017, 04:03 PM IST
ஐசிசி டெஸ்ட் பவுலர்கள்: ஜடேஜா முதலிடம், 2-வது இடத்தில் அஸ்வின் title=

சர்வேதச டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஜடேஜா அற்புதமாகப் பந்துவீசி வருகிறார். சிறப்பாக பந்து வீசி அசத்திய ஜடேஜா அதிக விக்கெட்களை கைப்பற்றினார். 

இதை தொடர்ந்து டெஸ்ட் பவுலர்கள் பட்டியலில் 899 புள்ளிகளை பெற்று சர்வதேச டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 862 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் வங்கதேத்தின் ஷகிப் அல்ஹசன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அஸ்வின் 2-வது இடத்தில் உள்ளார். ஜடேஜாவுக்கு 3-ம் இடம் கிடைத்துள்ளது.

அதேபோல பேட்டிங்கில் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் 941 புள்ளிகளுடன் முதலிடத்திலும்,  861 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் புஜாரா உள்ளார். விராட் கோலி 826 புள்ளிகளுடன் 4-ம் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

Trending News