5வது டெஸ்ட்: முதல் நாளில் இங்கிலாந்து 284/4

Last Updated : Dec 16, 2016, 06:18 PM IST
5வது டெஸ்ட்: முதல் நாளில் இங்கிலாந்து 284/4 title=

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 

ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’ ஆன நிலையில் அடுத்த 3 டெஸ்டுகளில் முறையே 246 ரன், 8 விக்கெட், இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் ஆகிய வித்தியாசங்களில் இந்திய அணி இமாலய வெற்றியை பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியுள்ளது. டாசில் வென்ற இங்கிலாந்து அணி தற்போது முதலில்  பேட்டிங்  செய்தது.  தொடக்க வீரர்களாக குக், ஜென்னிங்ஸ் களம் இறங்கினார்கள். 6-வது ஓவரில் முதல் விக்கெட்டை இங்கிலாந்து இழந்தது. இஷாந்த் சர்மா பந்தில் ஜென்னிங்ஸ் அவுட் ஆனார்.  அடுத்து ஜோரூட் களம் வந்தார். கேப்டன் குக் 10 ரன்னில் ஜடேஜா பந்தில் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 21 ரன்னாக இருந்தது. அடுத்து ஜோரூட்டுடன் மொய்ன் அலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். ஜோ ரூட் 88 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய மொயீன் அலி சதம் அடித்தார். இந்த தொடரில் இது அவரது 2-வது சதமாகும். மொயீன் அலி 120 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

சென்னை சேப்பாக்கத்தில் இதுவரை 31 டெஸ்டுகளில் விளையாடி உள்ள இந்திய அணி அதில் 13 வெற்றியும், 6 தோல்வியும், 11 டிராவும் கண்டுள்ளது. 

1993-ம் ஆண்டு முகமது அசாருதீன் தலைமையில் 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றதே இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் சிறந்த செயல்படாக உள்ளது. இந்த முறை 4-0 என்ற கணக்கில் தொடரை சொந்தமாக்கினால், அது புதிய வரலாறாக அமையும்.

இந்த தொடரில் 640 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்துள்ள இந்திய கேப்டன் விராட் கோலி சென்னை டெஸ்டில் 135 ரன்கள் எடுத்தால் ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர் என்ற சாதனையை கவாஸ்கரிடம் (774 ரன்) இருந்து தட்டிப்பறித்து விடுவார்.

 

 

Trending News