5வது டெஸ்ட்; முதல் நாள்: அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தவிக்கும் இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 7, 2018, 09:26 PM IST
5வது டெஸ்ட்; முதல் நாள்: அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தவிக்கும் இங்கிலாந்து title=

64.4 வது ஓவரில் 134 ரன்கள் எடுத்திருந்த போது நான்காவது விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து அணி. இஷாந்த் சர்மா வீசிய பந்தில் ஜானி பேர்ஸ்டோவ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.

தற்போது இங்கிலாந்து அணி 65 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழபுக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.

 


63.2 வது ஓவரில் 133 ரன்கள் எடுத்திருந்த போது மூன்றாவது விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து அணி. பும்ரா வீசிய பந்தில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.

தற்போது இங்கிலாந்து அணி 64 ஓவருக்கு மூன்று விக்கெட் இழந்து 133 ரன்கள் எடுத்துள்ளது.

 

 


63.2 வது ஓவரில் 133 ரன்கள் எடுத்திருந்த போது இரண்டாவது விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து அணி. பும்ரா வீசிய பந்தில் அலஸ்டெய்ர் குக் 190 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

தற்போது மோயீன் அலி* 28(115) உடன் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் விளையாடி வருகிறார். 

 

 


டெஸ்ட் போட்டியில் தனது கடைசி அரைசதத்தை அடித்தார் அலஸ்டெய்ர் குக். இது இவரின் 57 வது அரைசதமாகும்.

 


45.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை எடுத்தது இங்கிலாந்து அணி. தற்போது இங்கிலாந்து அணியின் வீரர்களான அலஸ்டெய்ர் குக்* 51(141) மற்றும் மோயீன் அலி* 22(74) ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.

 

 


ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதலாவது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.

தற்போது அலஸ்டெய்ர் குக்* 37(77) மற்றும் மோயீன் அலி* 2(16) ரன்கள் எடுத்துள்ளனர்.

 

 


23.1 ஓவரில் இந்திய சுழல் பந்து வீச்சாளர் ஜடேஜா பந்தில் கீட்டன் ஜென்னிங்ஸ் 23 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். தற்போது அலஸ்டெய்ர் குக்குடன் சேர்ந்து மோயீன் அலி விளையாடி வருகிறார்.

 

 


17.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை எடுத்த இங்கிலாந்து அணி. கீட்டன் ஜென்னிங்ஸ்* 15(53) அலஸ்டெய்ர் குக் 28(49) ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.

 


இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

 

 

 


இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் மூன்று போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியும், ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றியும் பெற்றது. இதன் மூலம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது. இந்த நிலையில் இரு அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்க உள்ளது.

கடைசியாக நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும், பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் வெற்றி வாய்ப்பு பறிபோனது. இதனால் தொடரையும் இலக்க நேரிட்டது. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி, புஜாரா, ரஹானே தவிர மற்ற வீரர்கள் எதிர்பார்த்தப்படி ஆடவில்லை. 

அடுத்த வருடம் இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்திய வீரர்களின் ஆட்டம் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்திய அணியின் மோசமான செயல்பாட்டிற்கு முன்னால் இந்திய வீரர்கள் சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங் மற்றும் கங்குலி கடுமையாக விமர்சித்துள்ளனர். 

இந்நிலையில், இன்று ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இலண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் விளையாடும் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாகா ஹனுமா விகாரி சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இந்த மைதானத்தில் கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய அணி விளையாடியது. அந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 266 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மீண்டும் இதே மைதானத்தில் இந்திய அணி விளையாடுகிறது. இந்திய வீரர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்தால், இந்திய அணியின் வெற்றி தூரம் இல்லை. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தங்கள் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-2 என்ற கணக்கில் நிறைவு செய்யலாம்.

அதேவேளையில், இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ளதால், நல்ல மனநிலையில் உள்ளனர். இந்த அணியின் தொடக்க வீரர் அலஸ்டைர் குக்கின் கடைசி போட்டி என்பதால் அவரை வெற்றியுடன் வழியனுப்ப இங்கிலாந்து அணி வெற்றி பெற முயற்சி செய்யும். ஏற்கனவே இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வெல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெறும் டெஸ்ட் போட்டி  பிற்பகல் 3.30 மணிக்கு துவங்கும். 

Trending News