ஒசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்காத காரணத்தால் தங்களது 17 வயது மகள் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையின் முன்பு பெற்றோர் தர்ணா போராட்டம் நடத்தினர். என்ன நடந்தது என்பதை காணலாம்.
இந்து விரோத, விவசாய விரோத திமுக அரசை நீக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ஊழல் முறைகேடு தொடர்பாக பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் என தொடர்ச்சியாக தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஹெச். ராஜா கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில் கொசுவர்த்தி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
திமுகவின் எம்பிக்களை கொள்ளை அடிப்பதற்கு பயன்படுத்தாமல் பாராளுமன்றத்தை முடக்கி நீட் தேர்வுக்கு விதிவிலக்கு பெற வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் பொன்னையன் பேட்டியளித்துள்ளார்.
எழும்பூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை கொடுக்கப்பட்டதால் கால் பாதிக்கப்பட்டதாக கூறி மகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்ட காவலர், இன்று மீண்டும் டிஜிபி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெய்வேலி என்எல்சி போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பாமகவைச் சேர்ந்த 25 பேர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த கலவரத்தில் 8 காவல்துறையினர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நெய்வேலி என்எல்சி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தொண்டர்கள் நடத்திய தாக்குதலில் கலவரம் வெடித்தது. இதனால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் ஏற்படுள்ளது.
மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வரும் ஜூலை 24ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
பள்ளிகொண்டா நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றியபோது, உங்கள் காலில் கூட விழுகிறேன் என் மாட்டு கொட்டகையை மட்டும் விட்டுவிடுங்கள் என மூதாட்டி ஒருவர் கெஞ்சியபோதும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை கிடப்பில் போட்டிருக்கும் தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரே எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தியுள்ளார்.
சென்னையில் 21 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய புதிய பேட்டரி மகேந்திரா கார் 3 மாதத்தில் 3 முறை நடு ரோட்டில் நின்று விட்டதாக குற்றம்சாட்டிய உரிமையாளர், புகாருக்கு அலட்சியமாக பதிலளித்தால் மன உளைச்சலுக்கி ஆளாகி தர்ணாவில் ஈடுபட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.