எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுநீரகப் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த தன் மகளுக்கு தவறான சிகிச்சை வழங்கப்பட்டதால் தன் 10 வயது மகளின் கால் பாதிக்கப்பட்டதாக கடந்த ஏப்ரல் மாதம் தலைமை செயலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட ஓட்டேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் கோதண்டபாணி. மருத்துவமனை தரப்பில் அதன் பிறகும் கூட சரியான விளக்கம் இதுவரை வழங்கப்படவில்லை என கூறி மீண்டும் தற்போது தன் மகளுடன் காமராஜர் சாலையில் டிஜிபி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.
சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் கோதண்டபாணி என்பவர் தனது மகளான பிரதிக்ஷாவை சிறுநீரக பிரச்சனை காரணமாக எழும்பூர் மருத்துவமனையில் 3 வயது முதல் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின் சிறுநீரகப் பிரச்சனைக்காக வழங்கப்பட்ட மாத்திரைகளை தொடர்ச்சியாக மகள் பிரதிசாவுக்கு கொடுத்த வந்தநிலையில் மாத்திரையில் எதிர் விளைவு ஏற்பட்டு அவருக்கு காலில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
இது குறித்து மருத்துவமனை உரிய விளக்கம் அளிக்க வேண்டும், தவறான சிகிச்சைக்கு பதில் சொல்ல வேண்டும், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் தலைமைச் செயலகத்தில் தன் மகளுடன் காவலர் கோதண்டபாணி திடீரென சாலையில் தர்ண போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அன்று தலைமைச் செயலக சாலையில் சற்று பரபரப்பு ஏற்பட்டிருந்தது. அதன்பின் காவலர்கள் சமாதானப்படுத்திய அவரை அனுப்பி வைத்தனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் சென்னை காமராஜர் சாலையில் மகளுடன் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இத்தனை நாட்கள் ஆகியும் தனது மகளுக்கு நல்ல சிகிச்சை கிடைக்கவில்லை எனவும், மருத்துவமனை சார்பில் தற்போது வரை தவறான சிகிச்சை வழங்கப்பட்டதற்கு குழு அமைக்கவோ முறையான விளக்கம் கொடுக்கவும் இல்லை எனவும் குற்றம்சாட்டினார். தேசிய குழந்தைகள் ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதன் பிறகு நான்கு மாதங்கள் கழித்து தற்பொழுது குழந்தைக்கு மாற்று திறனாளி சான்றிதழ் வழங்குவதாக கூறியுள்ளதாகவும் தெரிவித்த அவர், ஆனால் தன் குழந்தைக்கு தவறான சிகிச்சை வழங்கப்பட்டது குறித்து விளக்கம் தான் தனக்கு வேண்டும், மாற்று திறனாளி சான்றிதழ் வேண்டாம் என்று கவலையோடு கூறினார்.
மேலும், என்றால் எங்கள் இருவரையும் கருணை கொலை செய்து விடுங்கள் எனவும் காவலர் கோதண்டபாணி கோரிக்கை வைத்துள்ளார். 20 நிமிடம் தன் மகளுடன் சாலையில் தர்ணாவில் ஈடுபட்டிருந்த தலைமை காவலரை மெரினா காவல் நிலைய காவலர்கள் சாமதானம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
மேலும் படிக்க | அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி உள்ளது? சமீபத்திய தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ