பெண்களை ஈசியாக ஈர்க்க கொரிய ஆண்கள் செய்யும் விஷயம்! கத்துக்கோங் பாய்ஸ்..

Dating Tips To Learn From Korean Men : இந்திய பெண்கள் பலருக்கு கெரிய ஆண்களை பிடித்திருப்பதை பல்வேறு தொடர்களில் பார்த்திருப்போம். இதற்கு அவர்கள் செய்யும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Dec 23, 2024, 05:28 PM IST
  • கொரிய ஆண்களிடம் இருந்து இந்திய ஆண்கள் கற்றுக்கொள்ள வேண்டியது
  • எல்லாமே டேட்டிங் டிப்ஸ்
  • இவைதான் பெண்களை ஈர்க்கும் விஷயங்கள்!
பெண்களை ஈசியாக ஈர்க்க கொரிய ஆண்கள் செய்யும் விஷயம்! கத்துக்கோங் பாய்ஸ்.. title=

Dating Tips To Learn From Korean Men : இந்திய பெண்கள் பலருக்கு கொரிய இசைக்குழுவினரையும், கொரிய தொடர்களில் வருபவர்களையும் பிடித்திருப்பதை பார்த்திருப்போம். ஒரு சில பெண்கள், அளவுக்கு மீறி ஆன்லைன் மூலம் டேட்டிங் செய்து கொரியாவை சேர்ந்த ஆண்களை திருமணமே செய்து கொள்கின்றனர். இப்படி, பெண்களை மிகச்சுலபமாக கொரிய ஆண்கள் கவருவது எப்படி? அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய டேட்டிங் டிப்ஸ். 

சிந்தனையை வெளிப்படுத்துதல்: 

பெரும்பாலானவர்களிடம் இருக்கும் பிரச்சனை மனதில் இருப்பதை வெளியில் சொல்லாததுதான். இதனை கொரிய ஆண்கள் செய்வதில்லை. அவர்கள், தங்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று கூறுவதோடு, தங்களின் பார்ட்னருக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பதை அவர்கள் பேசுவதை வைத்து தெரிந்து கொள்கின்றனர். அதே போல, தனக்கு பிடித்தவருக்கு எது பிடிக்கும் என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு அதை வைத்து பரிசும் கொடுப்பர். 

நேரம் செலவிடுதல்: 

பலர், தங்கள் மனதுக்கு வேண்டிய பெண் கிடைக்கும் வரை பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வர். ஆனால், அந்த பெண் கிடைத்தவுடன் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் பாதி காணாமல் போய் விடும். அதில் ஒன்று, பிடித்தவருடன் நேரம் செலவிடுதல். எப்போதும் ஒரு மனிதர் பிசியாக இருப்பது என்பது இயலாத காரியம். எனவே, என்ன வேலையாக இருந்தாலும் கொரிய ஆண்கள் தங்களுக்கு பிடித்தவருடன் 10 நிமிடமாவது நேரம் செலவிட தவறுவதில்லை. 

தொடுதல்: 

பலருக்கு, தொடுதல் என்பது அவர்களின் காதல் மொழியாக இருக்காது. ஆனால், கொரிய ஆண்கள் கைக்கோர்த்துக்கொள்வது, கட்டிப்பிடிப்பது போன்ற தொடுதல்களை செய்கின்றனர். இது, ஒரு வகையில் காதலை வெளிப்படுத்தும் செய்கையாகும். இதை எப்போதும் செய்யவில்லை என்றாலும், எப்போதாவது செய்ய வேண்டும். 

ஆள் பாதி-ஆடை பாதி: 

இந்த கான்செப்ட் பலருக்கு அந்நியமாக இருக்கலாம். ஆனால், இதுதான் உண்மை. எங்கு எப்போது வெளியில் போனாலும் கண்டிப்பாக நன்றாக ஆடை உடுத்திக்கொண்டு செல்ல வேண்டும். நீங்கள் பிறரை ஈர்ப்பதற்காக இல்லை என்றாலும், உங்களை நீங்கள் கண்ணாடியில் பார்க்கும் போது உங்களுக்கு பிடிக்க வேண்டும். அதற்காக நீங்கள் நன்றாக ஆடை உடுத்த வேண்டும். அது மட்டுமன்றி, பெண்களுக்கு ஸ்டைலாக ஆடை உடுத்தியிருக்கும் ஆண்களை மிகவும் பிடிக்கும்.

மரியாதை செலுத்துதல்: 

பெண்களுக்கு, எந்த ஆண் பிறரை நன்றாக நடத்துகிறாரோ, மதிக்கிறாரோ அவரை மிகவும் பிடிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமன்றி யாரென்றே தெரியாதவர்களுக்கு கூட மதிப்பு கொடுக்க கற்றுக்கொண்டீர்கள் என்றால் பெண்கள் கண்டிப்பாக உங்களால் வசீகரிக்கப்படுவர்.

மேலும் படிக்க | இந்திய பெண்களுக்கு கொரிய ஆண்களை பிடிப்பது ஏன்? காரணம் ‘இது’தான்..!

டேட்டிங் செய்ய திட்டமிடுவது: 

தங்கள் கேர்ள் ஃப்ரண்டுடன் வெளியில் செல்ல திட்டம் தீட்டும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும், தனக்கு பிடித்த இடத்திற்கு அழைத்து செல்ல, அதற்கென்று நேரமெடுத்து திட்டமிட்டால், அவர்கள் உங்கள் மீது ஈர்க்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. 

முயற்சிகளை பாராட்டுதல்: 

பெண்களுக்கு தங்கள் முயற்சிகளை பார்த்து பாராட்டும் ஆண்களை மிகவும் பிடிக்கும். எனவே, உங்களுக்காக யாரேனும் முயற்சி எடுத்து ஒரு கிஃப்ட் கொடுக்கிறார், அல்லது ஒரு நல்ல விஷயத்தை செய்கிறார் என்றால் அதனை மனம் வந்து பாராட்ட வேண்டும். இப்படி அவர்களின் முயற்சிகளை அங்கீகரிக்கும் போது அவர்களுக்கு ஒரு வித மகிழ்ச்சி ஏற்படும். மேலும் உங்களுக்கு இதே போல பல விஷயங்களை செய்ய வேண்டும் என தோன்றும். 

மேலும் படிக்க | எவ்வளவு சாப்பிட்டாலும் வெயிட் ஏறாத கொரியர்கள்! பின்பற்றும் டயட் இதுதான்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News