உச்சநீதிமன்றத்தில் முலாயம் சிங்கிற்கு (Mulayam Singh) எதிராக BSP தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்பப் பெற்றதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா உறுதிப்படுத்தி உள்ளார்.
சமாஜ்வாதி கட்சி பொறுப்பை மகன் அகிலேஷ் கைப்பற்றியதை அடுத்து, கட்சி பணிகளில் இருந்து முலாயம் சிங் ஒதுங்கி இருந்து வந்தார். இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி துவங்கப்பட்டதன் 25 வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாநில மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டிற்கு முலாயம் சிங்கிற்கோ, அவரது சகோதரர் சிவ்பாலுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனையடுத்து லோக்தல் கட்சியை இணைத்து புதிய அரசியல் கட்சியை துவக்க முலாயம் முடிவு செய்து இருந்தார். இதற்கான அறிவிப்பை முலாயம் இன்று வெளியிட போவதாக முன்னதாக அறிவித்து இருந்தார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
11 மாவட்டங்களில் உள்ள 67 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஷரன்பூர், பிஜ்னோர், பரேலி, பிலிபிட், லகிம்புர் கெரி ஆகிய முக்கிய தொகுதிகள் இதில் அடக்கம்.
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில், முதல்கட்டமாக 73 தொகுதிகளுக்கு நடைபெறும் ஓட்டுப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர்.
முன்னாள் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் சிவ்பால் யாதவ் மார்ச் 11-ம் தேதி உ.பி தேர்தலில் முடிவுகள் அறிவிப்பு பின்னர் ஒரு புதிய கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்தார்.
தேர்தல் ஆணையம் சமாஜ்வாடி கட்சி தலைவரும் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு "சைக்கிள்" சின்னத்தை ஒதுக்கியது.
உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் சமாஜ்வாடி கட்சி குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டாக பிளந்துள்ளது. இதனையடுத்து கட்சியின் சின்னத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டி பெரிய அளவில் நடைபெற்று வந்தது. சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் இடையே கட்சியின் தேர்தல் சின்னமாக 'சைக்கிள்' தக்கவைத்து கொள்ள தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர்.
உத்தர பிரதேச மாநில தேர்தலில் தனது மகன் அகிலேஷ் யாதவை எதிர்த்து அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் போட்டியிடப் போவதாக அவர் கட்சித் தொண்டர்களிடம் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் சமாஜ்வாடி கட்சி குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டாக பிளந்துள்ளது. இதனையடுத்து கட்சியின் சின்னத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டி பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.
கட்சியில் பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை என கட்சியின் தேசியத் தலைவரான முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் முலாயம் சிங் யாதவ் கூறியதாவது:-
கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். கட்சியில் ஒற்றுமை வேண்டும் என்று நான் விரும்புகிறேன். புதிதாக எந்தக் கட்சியையும் தொடங்கவும் மாட்டேன், சின்னத்தையும் மாற்ற மாட்டேன்.
புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அகிலேஷ் யாதவ் தான் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என முலாயம்சிங் யாதவ் தெரிவித்தார்.
உ.பி., மாநிலத்தில் ஆளுங்கட்சியான சமாஜ்வாடி கட்சியில் தேசிய தலைவர் முலாயம்சிங் யாதவுக்கும், அவரது மகன் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு கட்சியில் பிளவை ஏற்பட்டது.
அடுத்த மாதம் முதல் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் யாருக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது என்பது தொடர்பாக தேர்தல் கமிஷன் இருவரிடமும் பெரும்பான்மை ஆதரவை கேட்டது.
முலாயம் சிங்கிற்கு மேலும் சிக்கல் ஏற்படுத்தும் வகையில், கட்சியின் வங்கிக்கணக்கை அகிலேஷ் யாதவ் முடக்கி வைத்துள்ளார்.இதன் மூலம் முலாயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமாஜ்வாதியின் சின்னமான சைக்கிள் சின்னம் யாருக்கு ஒதுக்க வேண்டும் என்பதற்காக நிரூபிக்க வேண்டும் என முலாயம்சிங் மற்றும் அகிலேசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னத்தை தங்களுக்கு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்க அகிலேஷ் யாதவ் ஆதரவு தலைவருமான, ராஜ்யசபா எம்.பி.யுமான ராம் கோபால் யாதவ் இன்று தேர்தல் ஆணையம் செல்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.