பாஜக தலைமையிலான ஆட்சியின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதால், ஏப்ரல்-மே மாதங்களில் பொதுத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
இன்னும் லோக்சபா தேர்தல்களின் தேதிகள் அறிவிக்கபடாத நிலையில், பல கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இந்தநிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று காங்கிரஸ் வெளியிட்டது. இந்த பட்டியலில் உத்தர பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்த 15 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த 11 வேட்பாளர்கள் மற்றும் குஜராத்தை சேர்ந்த நான்கு வேட்பாளர்களின் பெயர்களும் இருந்தன.
11 வேட்பாளர்கள் கொண்ட உத்தர பிரதேசத்தில் பட்யலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகின்றார். அதேபோல முன்னால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடுகின்றார் என அறிவிகப்பட்டு இருந்தது.
நேற்று காங்கிரஸ் கட்சி தனது முதல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டதால், இன்று சமாஜ்வாடி கட்சி ஆறு பேர் கொண்ட தனது முதல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் மேன்புரி தொகுதியில் போட்டியிடுகின்றார். ஏற்கனவே கடந்த தேர்தலில் இதே தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் முலாயம் சிங் யாதவ் ஆஜ்கார் மற்றும் மேன்புரி என்ற இரண்டு தொகுதியில் போட்டியிட்டார். இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றா. பின்னர் மேன்புரி தொகுதியில் இருந்து விலகினார். தற்போது அவர் ஆஜ்கார் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.