மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே மாநில அரசே இந்த ஆலையை எடுத்து ஆக்சிஜனை தயாரிக்கலாம்” என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியுள்ள கேள்வி, இன்றைக்கு நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் உச்சபட்ச நிலையை அனைவருக்கும் உணர வைக்கிறது.
மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த கனிமொழி குணமடைந்ததால் மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினார். மேலும் ஐந்து நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணிச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 21 ஆம் தேதி மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் மிரட்டல் விடுத்த குற்றவாளிக்கு எதிராக சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் (Chennai Cyber Crime) பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், பெண்கள் ஆகியோரின் பாதுகாப்பு பொதுவாக ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
காசு படைத்தவர்கள் இந்தி மொழியை கற்றுக் கொண்டு, வாய்ப்புகளை பெருக்கி கொள்ளும் போது, அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அந்த வாய்ப்பை மறுக்கும் வகையில், மும்மொழிக் கொள்கையை எதிர்த்து வருகிறது திமுக கட்சி.
இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக கட்சியை சேர்ந்த எம்பியான கனிமொழி, தனக்கு இந்தி தெரியாததால், தான் இந்தியரா என பாதுகாப்பு அதிகாரி கேட்டதாகவும், இந்தி தெரிந்தால் தான் இந்தியரா எனவும் தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.
தமிழக அரசு மாணவர்களின் எதிர்காலம் குறித்து ஒரு முடிவை எடுக்கும்போது, நன்மை தீமைகளை எடைபோட்டு தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தல்.
சாத்தான்குளம் சம்பவம் குறித்து எந்தவித ஆதாரமும் இல்லாமல் அரசு மீது குற்றம்சாட்டும் எம்.பி. கனிமொழிக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எச்சரித்துள்ளார்.
மற்றொரு குற்றவாளியின் மீது, காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டியதுபோல் அல்லாமல், இதில் உடனே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.