திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி!

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 3, 2021, 12:26 PM IST
திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி! title=

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 89,129 புதிய COVID-19 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது ஆறு மாதங்களில்  ஒரே நாளில் பதிவான் அதிகபட்ச  தொற்று பாதிப்புகள் ஆகும்.

80,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்று பாதிப்புகளுடன், இது வரை கொரோனா தொற்று (Coronavirus) ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,23,92,260 ஆகவும், சிகிச்சையில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 6,58,909  என்ற அளவை எட்டியுள்ளதாகவும் சனிக்கிழமை (ஏப்ரல் 3) காலை 8 மணிக்கு வெளியிட்டப்பட்ட சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | Shocking: புதிதாகப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று

இந்த அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக (DMK) எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி (Kanimozhi) ஈடுபட்டு இருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து கனிமொழி, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திருநெல்வேலியில் பாளையங்கோட்டை மற்றும் ஆலங்குளம், சங்கரன்கோவில் உள்ளிட்டப் பகுதிகளில் கனிமொழி நேற்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News