ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் வெளிநாட்டுகள் தலையிட்டு பிரச்னையை ஏற்படுத்துவதாக அம்மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் காஷ்மீர் பிராந்தியத் தளபதி பர்ஹான் வானி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, புல்வாமா, குல்காம், சோபியான், அனந்த்நாக் ஆகிய 4 மாவட்டங்களிலும் வன்முறை வெடித்தது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புத்காம் பகுதியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த தீவிரவாதிகளிடமிருந்து பயங்கர ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் பாதுகாப்பு படையினர் கைபற்றினர்.
முதற்கட்ட தவலின்படி 3 தீவிரவாதிகளும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. இருப்பினும் அவர்களது பெயர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. தீவிரவாதிகளின் சடலங்களை கைப்பற்றிய போலீசார், அவர்கள் வைத்திருந்த துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.
ஜம்மு-காஷ்மீர் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.
இது தொடர்பாக போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ”புல்வாமா மாவட்டத்தின் பஹ்ம்னூ பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் இன்று காலை தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் பணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்” என்றார்.
இதனையடுத்து, பஹ்ம்னூ பகுதியில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தியாவிற்கு அல்கொய்தா மிரட்டல் ‘எங்கள் காஷ்மீர் சகோதரர்களை’ கொன்றவர்களே நீங்கள் தான் எங்கள் அடுத்த குறி என கூறியுள்ளது. மிரட்டல் குறித்து அல் கொய்தா ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
எங்கள் விதிமுறைகளுக்கு எதிராக உள்ள அனைவரும் எங்களின் தாக்குதல் பட்டியலில் உள்ளனர். இந்திய பாதுகாப்பு படை மற்றும் இந்து மத பிரிவினைவாதிகள் அமைப்பின் தலைவர்கள் அனைவரும் எங்கள் குறி என ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் எங்கள் காஷ்மீர் சகோதரர்களை கொன்ற ராணுவ அதிகாரிகள் அனைவரையும் பழிவாங்குவோம் என கூறியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படை முகாம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இன்று அதிகாலை சுமார் 3:30 மணிக்கு இந்திய எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த பயங்கரவாதிகள் 4 பேர் சம்பல் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படையின் 45 படைப்பிரிவு முகாம் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலையடுத்து, இந்திய தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்நிலையில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயற்சி செய்த தீவிரவாதிகளை பாதுகாப்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
இந்திய - ரஷியா இடேயான உறவு நிலையா உறவாகும். இந்த உறவுகளை நீர்த்துப் போகச் செய்ய முடியாது.
பாகிஸ்தானுடன் வலுவான ராணுவ உறவுகளை ரஷியா கொண்டிருக்கவில்லை. இந்தியா - ரஷியா இடையிலான வர்த்தக உறவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.
ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி அதைத் தொடர்ந்து ரஷியா சென்றடைந்தார். அதிபர் விளாதிமீர் புதினின் சொந்த நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் அவருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜம்மு காஷ்மீரில் 40 குழந்தைகளுடன் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைத்துள்ள ரஜோரி மாவட்டத்தில் 40 குழந்தைகளுடன் சென்ற பள்ளி பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் உயிர் பலி ஏதாவது ஏற்பட்டுள்ளதா? என இதுவரை தகவல் வரவில்லை. ஆனால் பலர் காயம் அடைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் பனிலிங்க தரிசனம் செய்ய புனித யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக 27,000 ராணுவ வீரர்கள் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.
அமர்நாத் புனித யாத்திரை ஜூன் 29-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இங்கு செல்ல இதுவரை 1.8 லட்சம் பக்தர்கள் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அமர்நாத் யாத்திரிகர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை செயலாளர் ராஜிவ் மெஹ்ரிஷி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஜம்மு - காஷ்மீரில் பாலாகோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து எல்லையோர கிராமங்களையும் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவதால் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 1700 பேர் பத்திரமான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
இது தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது:-
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாகுதலையொட்டி இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தினர் அண்மையில் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் உடல்களையும் பாகிஸ்தான் ராணுவத்தினர் சிதைத்தனர். இச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன.
காஷ்மீரில், கல்வீச்சு சம்பவத்தில் இருந்து தப்பிக்க, ஒருவரை ஜீப் முன் ராணுவத்தினர் கட்டி வைத்து சென்ற சம்பவம் மிகவும் சரியான செயல் என ராணுவ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள புத்காம் என்ற பகுதியில், ஏப்ரல் 9-ம் தேதி இடைத் தேர்தல் பாதுகாப்புக்கு பணிக்காக ராணுவத்தை சேர்ந்த 53-வது ராஷ்டிரிய ரைபிள் படையை சேர்ந்த வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மீது இளைஞர்கள் தொடர்ந்து கற்களை வீசி தாக்குதலை நடத்தினர்.
காஷ்மீரின் எல்லைக் கோட்டை ஒட்டிய பகுதிகயில் அமைந்துள்ள நவ்சேரா உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் நவ்சேரா பகுதியில் பொது மக்கள் 2 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர்.
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்சேரா பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படைகள், இந்திய பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு இந்திய படைகளும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றன.
காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ஹெர்மெய்ன் எனும் பகுதியில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மர்ம முறையில் இறந்து கிடந்தார்.
லெப்டினன்ட் பதவியில் இருந்த அந்த அதிகாரி குல்காம் பகுதியைச் சேர்ந்தவர். சோபியானில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அங்கு அவர் மர்ம முறையில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளதாக ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பதுங்கு குழிகளை, இந்திய ராணுவம் ஏவுகணை வீசி தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த தாக்குதல் எப்போது நடத்தப்பட்டது என தெரியவில்லை. ஆனால் கடந்த வாரம் 2 இந்திய பாதுகாப்பு படை வீரர்களை கொன்று, அவர்களின் உடலை பாக்., கொடூரமாக சிதைத்ததற்கு பழிவாங்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
காஷ்மீர் மாநிலம் சோபியானில் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் காவலில் இருந்த 5 போலீசார் துப்பாக்கிகளை பயங்கரவாதிகள் கொள்ளையடித்து சென்றனர். இதேபோன்று மாநிலத்தில் வங்கிகள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு பயங்கரவாதிகளால் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படைகள் பயங்கரவாதிகளுக்கு எதிரான சிறப்பு தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளன, ஆனால் உள்ளூர் கல்வீச்சாளர்கள் இந்நகர்வுக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளனர்.
ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் 9-ம் தேதி நடந்த போது பெரும் வன்முறை வெடித்தது. வன்முறையில் 8 பேர் பலியாகினர் மேலும் பலர் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து ஆனந்த்நாக் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலையானது இல்லை என மாநில அரசு தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் மே 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே ஆனந்த்நாக் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 74 ஆயிரம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிக்கு தேவை என மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் கூறியது.
இந்திய வீரர் இருவரின் உடல்களை சிதைத்த பாகிஸ்தான் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு படையினர், இந்திய எல்லையில் சுமார் 250 மீட்டர் தூரத்திற்கு உள்ளே புகுந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணகாட்டி என்ற இடத்தில் உள்ள இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ கூட்டு நடவடிக்கை அதிகாரி பரம்ஜித்சிங் மற்றும் எல்லை பாதுகாப்பு படை தலைமை ஏட்டு பிரேம் சாகர் என்ற இரு இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாகட்டி சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இன்று காலை சுமார் 8 மணியிலிருந்து அதிநவீன ராக்கெட்டுகள் தானியங்கி துப்பாக்கிகள், சிறிய ரக கைத்துப்பாக்கிகளால் இங்குள்ள இந்திய நிலைகளின்மீது ஆவேச தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் படையினருக்கு இந்திய வீரர்கள் சரியான பதிலடி கொடுத்து வருவதாக ஸ்ரீநகரில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மீண்டும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதையடுத்து பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப், உள்பட 22 சமூக வலைதளங்களை காஷ்மீர் அரசு அதிரடியாக தடை செய்துள்ளது. 22 சமூக வலை தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஒரு மாதம் அல்லது மறுஉத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்று அம்மாநில உள்துறை முதன்மை செயலாளர் ஆர்.கே. கோயல் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.