இந்திய வீரர் இருவரின் உடல்களை சிதைத்த பாகிஸ்தான் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு படையினர், இந்திய எல்லையில் சுமார் 250 மீட்டர் தூரத்திற்கு உள்ளே புகுந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணகாட்டி என்ற இடத்தில் உள்ள இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ கூட்டு நடவடிக்கை அதிகாரி பரம்ஜித்சிங் மற்றும் எல்லை பாதுகாப்பு படை தலைமை ஏட்டு பிரேம் சாகர் என்ற இரு இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றது.
இரு வீரர்களின் உடல்களை சிதைத்து வீசிய பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்தும், காஷ்மீர் சென்று உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் காஷ்மீர் எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.