Kalaignar Magalir Urimai Thogai, Ration Card | 2021 ஆம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதியாக அளித்த மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் திட்டம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) என்ற பெயரில் பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது. இப்போது வரை சுமார் 1 கோடியே 20 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளாக இருக்கின்றனர். ஆனால், பலருக்கு இந்த திட்டத்தில் உரிமைத் தொகை கிடைப்பதில்லை. இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியாக இருக்கிறது. ரேஷன் கார்டு வைத்திருந்தும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தும் அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை பணம் உங்களுக்கு வரவில்லையா? அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்
இதனால் அதிருப்தியடைந்த பெண்கள் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்கு மீண்டும் விண்ணப்பித்து பல மாதங்களாக காத்திருக்கின்றனர். ஆனால் அவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனையிலேயே இருக்கிறது. இதுகுறித்து அண்மையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். முதல்கட்டமாக ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களில் தகுதியானவர்கள் மீண்டும் இந்த திட்டத்துக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், இதுவரை விண்ணப்பிக்காத அல்லது புதிய தகுதி வாய்ந்த பெண்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்திருந்தார்.
அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு
இந்நிலையில், அதுகுறித்த லேட்டஸ்ட் அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது. இதனை அமைச்சர் எஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். கலைஞர் உரிமைத் தொகை திட்டம் குறித்து அவர் எழுதியிருக்கும் பதிவில், " கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தங்களுடைய ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத அளவில் வழங்கிட வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் இலக்காகும். மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைகளைப் பெற்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என இன்று விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதியளித்தேன்" என தெரிவித்துள்ளார்.
அதனால், ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைப்பது இப்போது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்து, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இந்த திட்டத்தில் சேர்க்கக்கோரி விண்ணப்பிக்க வேண்டும். புதியவர்களும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக விண்ணப்பிக்கலாம். விரைவில் இந்த விண்ணப்பங்கள் மீது பரிசீலனை தொடங்க இருப்பதால், முடிந்தளவுக்கு சீக்கிரம் விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு குட் நியூஸ் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
எப்போது முதல் கலைஞர் உரிமைத் தொகை கிடைக்கும்?
கலைஞர் உரிமைத் தொகை பொங்கல் பரிசாக தமிழ்நாடு அரசு புதிய பயனாளிகளுக்கு வழங்க அதிக வாய்ப்பு இருக்கிறது. விரைவில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக இருப்பதால், அதிருப்தியில் இருக்கும் பெண்களை சமாதானப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. இருப்பினும் எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பில்லை. அரசு ஏற்கனவே நிர்ணயித்திருக்கும் தகுதி அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ